சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் நினைவு நாளையொட்டி காலிஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் விமான பயணிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் நவம்பர் 1-19 வரையில் ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு ஏர் இந்தியா விமானங்களில் செல்ல வேண்டாம் என கூறியுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
கனடா மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற பன்னூன், கடந்த ஆண்டும் இதே காலப்பகுதியில் இதேபோன்ற அச்சுறுத்தலை விடுத்ததுள்ளார். பயணிகளுக்கு பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. விமான நிறுவனங்கள் இந்த வாரம் மட்டும் 100 விமானங்கள் போலி மிரட்டல்களைப் பெற்றுள்ளதாக கூறுகின்றன. இண்டிகோ, விஸ்தாரா, ஆகாசா ஏர் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை சர்வதேச விமானங்கள் உட்பட வெடிகுண்டு மிரட்டல்களைப் பெற்ற விமான நிறுவனங்கள் ஆகும் என்று பி.டி.ஐ வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா ஆகிய 6 விமானங்களுக்கு அக்டோபர் 20 அன்று மிரட்டல் வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு காலிஸ்தானித் தலைவரும் கனேடிய குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கொலை தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்குமான உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் இந்த பிரச்சனையும் வந்துள்ளது. இந்தியா பன்னூன் மற்றும் நிஜ்ஜார் இருவரையும் பயங்கரவாதிகள் என்று அறிவித்தது.
குர்பத்வந்த் சிங் பன்னுன் யார்?: கனடா மற்றும் அமெரிக்க குடிமகனான குர்பத்வந்த் சிங் பன்னுன், சீக்கியர்களுக்கான நீதி நிறுவனமான Sikhs for Justice இன் பொது ஆலோசகராக உள்ளார். கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய இந்திய புலம்பெயர்ந்த மக்கள் உள்ள நாடுகளில் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு முக்கிய அமைப்பாளராக இவர் இருந்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் மக்கள் சீக்கியர்களுக்கு தனி மாநிலத்தை கோரும் கருத்து உடையவர்கள் ஆவர். நோக்கிய கருத்துக்கணிப்புகளின்
"இந்தியா என்னை கொல்ல விரும்புகிறது, ஏனென்றால் நான் கருத்துக்கணிப்பு பிரச்சாரத்தை (referendum campaign) நடத்துகிறேன். இந்தியாவின் சர்வதேச பயங்கிரவாதம் அமெரிக்காவின் இறையாண்மைக்கு நேரடி சவாலாக மாறியுள்ளது" என்று அவர் கடந்த ஆண்டு கூறியிருந்தார்.
பன்னுன் அம்ரித்சரின் புறநகரில் உள்ள கான்கோட் கிராமத்தில் பிறந்தார். அவர் 1990களில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக நம்பப்படுகிறது மற்றும் 2007 இல் SFJ ஐ நிறுவினார். நியூயார்க்கை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் கோரும் காலிஸ்தானி அமைப்பை ஆதரிக்கிறது.
இந்திய அரசாங்கம் 2019 ஆம் ஆண்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக SFJ ஐ தடை செய்தது. ஒரு வருடம் கழித்து, பன்னுன் பிரிவினைவாதத்தை ஊக்குவித்ததற்காகவும், பஞ்சாபி சீக்கிய இளைஞர்களை ஆயுதம் ஏந்த ஊக்குவித்ததற்காகவும் UAPA கீழ் "பயங்கரவாதியாக" அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக பன்னூன் ஒரு நேர்காணலின் போது, நிஜ்ஜார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நெருங்கிய கூட்டாளி என்றும் அவருக்கு ஒரு இளைய சகோதரர் போன்றவர் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், அவரது மரணத்திற்கு இந்தியாவே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications