ஈரானின் புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் தேர்வு..! சுட்டு வீழ்த்துவோம் என இஸ்ரேல் சூளுரை..!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுறவு தாக்குதலில் ஈரான் தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். கடந்த சனிக்கிழமை நடந்த இந்த படுகொலையை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவிலான பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான தங்களுடைய தாக்குதலை இதுவரை நிறுத்தவில்லை, இந்த சூழலில் ஈரானில் கமேனிக்கு அடுத்ததாக புதிய ஆட்சியாளராக யார் செயல்பட போகிறார், ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் மதகுருவாக யார் இனி வழிநடத்த போகிறார் என்பது குறித்து ஈரான் நாட்டு அரசாங்கம் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவால் கொலை செய்யப்பட்ட கமேனியின் குடும்பத்தில் அனைவருமே கொல்லப்பட்ட நிலையில் அவரது மகன் மொஜ்தபா மட்டுமே தற்போது உயிருடன் இருக்கிறார்.

ஈரானின் புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் தேர்வு..! சுட்டு வீழ்த்துவோம் என இஸ்ரேல் சூளுரை..!

இந்நிலையில் ஈரான் நாட்டு தலைவராகவும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களுக்கான மத குருவாகவும் மொஜ்தபா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் அரசியலமைப்பு சட்டத்தின் படி 1969 ஆம் ஆண்டு பிறந்த மொஜ்தபா இதுவரை ஆட்சியில் எந்த ஒரு பதவியையும் வகித்ததில்லை. இருந்தாலும் தந்தையின் ஆட்சியில் செல்வாக்கு மிக்க நபராக ஒரு இருந்தார். ஈரான் ஈராக் போரின்போது ஈரான் ஆயுதப்படையில் இணைந்தார். இவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக ஈரானின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்.

இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் ஈரானின் பயங்கரவாத அரசு யாரை தலைவராக தேர்வு செய்தாலும் அவர்களை சுட்டு வீழ்த்துவோம் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் ஈரானில் தற்போது பயங்கரவாத ஆட்சி நடைபெற்று வருகிறது, இந்த பயங்கரவாத அரசால் நியமிக்கப்படக்கூடிய எந்த ஒரு தலைவரும் கொல்லப்பட வேண்டியவர் என கூறியுள்ளார்.

ஏனெனில் இவரும் இஸ்ரேலை அழிப்பது , அமெரிக்காவுக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்துவது, பிராந்திய நாடுகளின் சுதந்திரத்தை பறிப்பது உள்ளிட்ட செயல்களில் தான் ஈடுபடுவார்கள். குறிப்பாக ஈரான் மக்களை அடக்குவதே நோக்கமாகக் கொண்டிருப்பார்கள் எனவே இந்த பயங்கரவாதத்தை தேர்ந்தெடுக்கக்கூடிய எந்த ஒரு தலைவரும் எங்களுடைய அடுத்த படுகொலைக்கான இலக்காக இருப்பார்கள் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க ராணுவம் ஈரானில் 2000 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க படைகளின் கமாண்டர் அட்மைரல் பிராட் கூப்பர் இப்போது தான் போரே தொடங்கி இருக்கிறது என கூறியுள்ளார். இதற்கிடையே அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 1000 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக ஈரான் அரசு கூறியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+