ஆண்டு இறுதி என்றால் பல்வேறு கார் விற்பனை நிறுவனங்களும் தங்களின் கார்களுக்கு அதிரடி தள்ளுபடிகளை வழங்கும். புது ஆண்டு தொடங்க இருப்பதால் நிறுவனங்களும் பிராண்டுகளும் தங்களின் வசம் இருக்கும் கார்களை விற்பனை செய்துவிட வேண்டும் என்று தான் பார்ப்பார்கள்.
அந்த வகையில் கியா நிறுவனம் தங்களுடைய கார்களுக்கு பல்வேறு தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அறிவித்துள்ளது. குறிப்பாக பிரீமியம் ரக கார்களுக்கு பெரிய அளவிலான சலுகைகளை அறிவித்திருக்கிறது. இந்த மாதம் முழுவதும் இந்த தள்ளுபடி விற்பனை இருக்கும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது .

Inspiring December என்ற பெயரில் கியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தங்களுடைய Seltos (old), Sonet, Syros, Carens Clavis (ICE and EV) மற்றும் Carnival ரக கார்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தும் எனக் கூறியிருக்கிறது. இந்த மாதம் தங்கள் நிறுவன கார்களை வாங்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு விலையில், தள்ளுபடி , எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் , லாயல்டி போனஸ் மற்றும் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்றும் ஒவ்வொரு மாடலுக்கும் ஒவ்வொரு வேரியன்ட் ரக கார்களுக்கும் இது மாற்றமடையும் என்றும் தெரிவித்திருக்கிறது.
நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து கியா ஷோரூம்களிலும் இந்த தள்ளுபடியும் சலுகைகளும் கிடைக்கும் என கூறியிருக்கிறது. கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவும் வாடிக்கையாளர்கள் கார்களை முன் பதிவு செய்து இந்த தள்ளுபடிகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த தள்ளுபடி முடிந்துவிடும் என்று அதன் பிறகு நீட்டிக்கப்படாது என்றும் தெரிவித்திருக்கிறது .
கியா நிறுவனம் தங்களுடைய மின்சார வாகன கார்களுக்கும் இந்த தள்ளுபடிகளை அறிவித்திருக்கிறது. இதன்படி வாடிக்கையாளர்கள் விலையில் தள்ளுபடி, லாயல்டி ஆஃபர் என 3.65 லட்சம் ரூபாய் வரை நிதி பலன்களை பெற இருக்கிறார்கள்.
இந்தியாவில் கியா நிறுவனத்திற்கு 2025 முக்கியமான ஆண்டு என கூறும் அதன் சேல்ஸ் பிரிவு தலைவர் அதுல் சூட், கியா குடும்பத்தில் பல புதிய உறுப்பினர்களை வரவேற்பதற்கும் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர்கள் உடனான எங்கள் உறவை வலுப்படுத்தவும் இந்த தள்ளுபடிகளை அறிவித்திருக்கிறோம் என கூறியுள்ளார்.
மின்சார கார்களுக்கும் தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் தான் அரசு கார்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றி அமைத்தது. இதனால் கார்களின் விலை குறைந்தது. ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை நாட்களில் கார்களின் விலை குறைந்து கார் விற்பனை அமோகமாக இருந்தது.


Click it and Unblock the Notifications