நாட்டின் மிகப் பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான கியா இந்தியா தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. கியாவின் செல்டோஸ், சோனட், காரென்ஸ் ஆகியவற்றின் விலை 2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்கின்றது.
சப்ளை செயினில் பொருட்கள் செலவு அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வை கியா அமல்படுத்துகிறது. இந்த ஆண்டில் அந்த நிறுவனம் அறிவித்துள்ள முதல் விலையேற்றம் இது.

கியா இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தேசியத் தலைவர் ஹர்தீப் சிங் ப்ரார் இதுபற்றி கூறுகையில், கியாவில், எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தயாரிப்புகளை வழங்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.
எப்படி இருந்தாலும் பொருட்களின் விலையில் தொடர்ச்சியான அதிகரிப்பு, பாதகமான மாற்று விகிதம் மற்றும் அதிகரித்து வரும் உள்ளீடு செலவு ஆகியவற்றின் காரணமாக, விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கியா நிறுவனம் இந்த அதிகரிப்பின் கணிசமான பகுதியை உள்வாங்கிக் கொள்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான கியா கார்களை அதிக செலவின்றி தொடர்ந்து வாங்கலாம்.
கியா இந்திய மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இருந்து வருகிறது. இன்றுவரை சுமார் 1.16 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அதன் வரிசையில், செல்டோஸ் 613,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து 395,000 யூனிட்டுகளுக்கு மேல் சோனெட் மற்றும் சுமார் 159,000 யூனிட்களுடன் கேரன்ஸ்.
முந்தைய மாதத்தில், கியா இந்தியா அதன் வரம்பில் 20,200 யூனிட்களின் மொத்த விற்பனை எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. அதிகபட்சமாக சோனட் 9,102 யூனிட்கள் விற்பனையானது. செல்டோஸ் 6,265 யூனிட்கள் மற்றும் கேரன்ஸ் 4,832 யூனிட்களுடன் பின்தங்கியுள்ளது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications