இந்திய ஆட்டோமொபைல் சந்தை பெரும் மாற்றத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறது. மக்களும், நிபுணர்கள் மத்தியில் இப்போது பெரும் விவாதமாக இருப்பது என்னவென்றால் எந்த கார் வாங்குவது என்பது. அதாவது எரிபொருள் அடிப்படையில் அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு எந்த கார் பெஸ்ட். பெட்ரோல்/டீசல் கார்களா அல்லது எலக்ட்ரிக் கார்களா என்பது தான்.
இதில் ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து உள்ளது, எலக்ட்ரிக் கார்கள் நீண்ட தூர பயணத்திற்கு செட் ஆகாது, அதனால் நகரங்களில் சிறிய தூர பயணத்திற்கு இது பெஸ்ட் சாய்ஸ் என கூறுகின்றனர். இதேபோல் மற்றொரு பிரிவினர் நீண்ட தூர பயணம், இரவு நேர பயணம் அதிகம் மேற்கொள்ளும் மக்களுக்கு பெட்ரோல்/டீசல் கார்கள் தான் பெஸ்ட் சாய்ஸ் என கூறுகின்றனர்.

இரண்டுக்கும் விலை வித்தியாசம், சர்வீஸ் கட்டணம், நீண்ட கால பயன்பாடு, ரீசேல் வேல்யூ, சார்ஜிங் கட்டமைப்பு, சார்ஜிங் செய்வதற்கான நேரம் என பல பாயின்ட்கள் புதிய கார் வாங்குவோர் மத்தியில் முக்கிய விவாத பொருளாக உள்ளது. இதேபோல் 2 கார் வாங்குவது என்பது சாமானிய மக்களுக்கு எளிதானது இல்லை என்பதை இதில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
இப்படி பல காரணிகளை ஆய்வு செய்யும் போது ஹைப்ரிட் கார்கள் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. நகரங்களில் டிராபிக் மத்தியில் பயணம், நீண்ட தூர பயணம், மைலேஜ் என பலவும் ஹைப்ரிட் கார்கள் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் ஒரு பிரச்சனை உள்ளது, இந்திய சந்தையில் ஹைப்ரிட் கார்களுக்கான மாடல், பிராண்டுகள் மிகவும் குறைவு.
இந்த பிரச்சனை தீர்க்கவும், மக்கள் மத்தியில் ஹைப்ரிட் கார்கள் தொடர்பான விருப்பம் அதிகரிக்கும் சூழ்நிலையை உணர்ந்து தென் கொரியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான கியா கார்ப்பரேஷன் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
கியா நிறுவனம் அடுத்த 18 மாதங்களுக்குள் ஒரு புதிய ஹைப்ரிட் காம்பாக்ட் எஸ்யூவி மாடல் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களான டொயோட்டா மற்றும் சுசூகி ஆகியவை மட்டுமே இதுவரையில் ஹைப்ரிட் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அதுவும் 1-2 மாடல்களில் மட்டுமே அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டா ஒரு மாடல் மட்டுமே வைத்துள்ளது.
கியா இந்த இடைவெளியை உணர்ந்து சிறிய ஹைப்ரிட் எஸ்யூவி பிரிவில் நுழைய முடிவு செய்துள்ளது, இப்பிரிவின் வளர்ச்சி பாதையின் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இருக்கும் மற்ற வாகன உற்பத்தியாளர்கள், தற்போது அதிகளவில் முழுமையான மின்சார வாகனங்களில் மட்டுமே அதிகளவிலான முதலீடுகளையும், கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். ஆனால் கியா மாத்தியோசி என பாணியில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த பிரிவில் முன்னோடியாக திகழ முயல்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications