டாடா கார்களுக்கு வேட்டு வைக்க வருகிறது கியா.. படுபயங்கரமான திட்டமாக இருக்கே..!!

இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது எலக்ட்ரிக் கார்களை அதிகமாக வாங்க தொடங்கி விட்டனர். இந்த கார்களின விற்பனை அதிகரிக்க தொடங்கி விட்டதால் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்புக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளன.

2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி-ஜூன்) உள்நாட்டில் மொத்தம் 48,000 எலக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியுள்து. இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 137 சதவீத வளர்ச்சியாகும். நாட்டின் எலக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிறுவனத்தின் நெக்ஸான் EV சுமார் 20 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது.

டாடா கார்களுக்கு வேட்டு வைக்க வருகிறது கியா.. படுபயங்கரமான திட்டமாக இருக்கே..!!

நெக்ஸான் EV விலை ரூ.14.74 லட்சம் முதல் ரூ.14.94 (எக்ஸ் ஷோரூம் விலை) என்ற அளவில் உள்ளது. இந்த காரின் வேரியண்ட் பொறுத்து ஒரு முறை சார்ஜ் செய்தால் 325 முதல் 465 கி.மீட்டர் வரை செல்லும். டாடா மோட்டார்ஸ் இந்த காரை 2020ல் அறிமுகம் செய்தது. அது முதல் இதுவரையிலான காலத்தில் இந்த மாடல் கார் 50,000க்கும் அதிகமாக விற்பனையாகி உள்ளது. மேலும் இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் காராக விளங்குகிறது.

இந்நிலையில், நெக்ஸான் EVக்கு போட்டியாக கியா இந்தியா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் காரை 2025ல் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் காருக்கு இன்னும் கியா நிறுவனம் பெயர் வைக்கவில்லை. இந்த கார் அந்நிறுவனத்தின் மேட் இன் இந்தியா எலக்ட்ரிக் காராக இருக்கும்.

இது தொடர்பாக கியா இந்தியா நிறுவனத்தின் தலைமை விற்பனை மற்றும் வணிக அதிகாரியான மங்ஸ் சிக் சோன் கூறுகையில், இது இந்தியாவிற்கான தனித்துவமான மாடல் என்பதால் இது போன்ற எலக்ட்ரிக் வாகனத்தை நீங்கள் எங்கும் பார்த்திருக்க மாட்டீர்கள். இதன் விலை வரம்பை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை என்றாலும், இது மலிவாகவும், நிக்ஸான் EVவுடன் ஒப்பீடும் அளவிலும் இருக்கும். இந்த கார் ஒரு வெகுஜன சந்தை எலக்ட்ரிக் வாகனமாக இருக்கும்.

மேலும் ஆண்டுக்கு 10,000 கார்களுக்கு மேல் விற்பனை செய்ய விரும்புகிறோம். கார் இன்னும் மேம்படுத்துவதில் இருப்பதால் காரின் வரம்பை என்னால் சரியாக சொல்ல முடியாது. ஆனால் இது நெக்ஸான் EVயை விட மிக அதிகமாக இருக்கும்.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள எங்கள் அனந்தபூர் ஆலையில் எலக்ட்ரிக் வாகனங்களின் உள்ளூர் உற்பத்திக்கு தயாராகி வருகிறோம். பேட்டரி அமைப்பை உள்ளூர்மயமாக்குவது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். இது தொடர்பாக உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் விவாதித்து வருகிறோம். வரிகள் குறைக்கப்பட்டால் அதிக மாடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெரிய சந்தை எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், எங்கள் சார்ஜிங் உள்கட்டமைப்பை பெற விரும்புகிறோம். நாங்கள் ஏற்கனவே 10 டீலர்ஷிப்களில் 160 கிலோவாட் வேகமான சார்ஜர்களை நிறுவியுள்ளோம். மேலும் எங்கள் டீலர்ஷிப் நெட்வொர்க்கில் 90 கிலோ வாட் சார்ஜர்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+