90ஸ் கிட்ஸ் என்றாலே அவர்களுக்கு என பல்வேறு மெமரிகள் இருக்கும். அதில் பொம்மைகளுக்கு தனியான ஒரு இடம் உண்டு. ஏனெனில் 90ஸ் கிட்ஸ்களுக்கு குழந்தை பருவத்தில் குறிப்பிட்ட அளவிலான பொம்மைகளே கிடைத்தன. ஆனால் ஒவ்வொரு பொம்மைக்கு பின்னாலும் பல நினைவலைகள் அவர்களிடம் இருக்கும்.
90ஸ் கிட்ஸ்கள் வயது ரீதியாக வளர்ந்து விட்டாலும் மனதளவில் இன்னும் குழந்தைகளாகவே தான் இருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக தான் ஒரு புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. உலக அளவில் அதிக அளவில் பொம்மைகளை வாங்குவது குழந்தைகள் கிடையாதாம் நம்ம 90ஸ் கிட்ஸ் என்கிறது சிர்கானா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை.

இந்த அறிக்கையில் வெளியிட்டுள்ள தகவலின் படி குழந்தைகளுக்காக தற்போது சந்தையில் கொண்டுவரப்பட்டுள்ள பெரும்பாலான பொம்மைகளை அவர்கள் வாங்குவதே கிடையாதாம். பெரியவர்கள் தான் குறிப்பாக 90ஸ் கிட்ஸ் தான் வாங்குகிறார்களாம்.
இதனால் சர்வதேச அளவில் பொம்மை விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. பல்வேறு 90ஸ் கிட்ஸ்களுக்கும் பொம்மைகளை வாங்கி வீட்டில் ஒரு நினைவாக வைத்துக் கொள்ளும் பழக்கம் அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
லீகோ, ஹாட் வீல்ஸ், மார்வெல் ஹீரோக்கள் உள்ளிட்ட பொம்மைகளை இவர்கள் அதிக அளவில் வாங்குகிறார்கள். இதனை சர்வதேச அளவில் Kidult trending என அழைக்கிறார்கள். அதாவது வயதில் பெரியவர்கள் குழந்தைகளை போல நடந்து கொள்வது. பல்வேறு சூப்பர் ஹீரோக்களின் பொம்மைகளை சேகரிப்பதை 90ஸ் கிட்ஸ்கள் போட்டி போட்டு கொண்டு செய்கிறார்களாம்.
இதனால் 90ஸ் கிட்ஸ்களின் நினைவுகளை தூண்டக்கூடிய பொம்மைகளின் விற்பனை சர்வதேச அளவில் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அண்மையில் கூட கிண்டர் ஜாய் நிறுவனம் இந்த ஒரு டிரெண்டை பயன்படுத்திக் கொண்டு ஹாரிபாட்டர் தீம்களில் பொம்மைகளை விற்பனை செய்தது.
ஹாரிபாட்டர் தீம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 10 மில்லியன் சாக்லேட் முட்டைகளில் 8 மில்லியன் சாக்லேட் முட்டைகளை விற்பனை செய்து கிண்டர் ஜாய் நிறுவனம் வருமானம் பார்த்தது.
இதில் இந்தியாவில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக சொல்லப்படுகிறது.
2021 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட 80 சதவீத பொம்மைகள் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் மத்திய அரசு பொம்மை தரம் குறித்து கடுமையான கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் கொண்டு வந்ததால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விகிதம் 57 சதவீதமாக குறைந்தது.
அதே வேளையில் இந்திய சந்தையில் பொம்மைகளின் தேவை குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொம்மைகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவிலேயே தற்போது பொம்மை உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கர்நாடக மாநிலத்தில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பொம்மை உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே புதிதாக தொழில் தொடங்க எண்ணுபவர்கள் இதனை அடிப்படையாக கொண்டு தொடங்கலாம்.


Click it and Unblock the Notifications