கிம் கர்தாஷியன், ஃபிலாய்ட் மேவெதர் மீது மோசடி வழக்கு..! #EthereumMax

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிம் கர்தாஷியன், குத்துச்சண்டை வீரர் ஃபிலாய்ட் மேவெதர் ஜூனியர், முன்னாள் என்பிஏ ஆல்-ஸ்டார் பால் பியர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள புகாரின் படி, இந்தப் பிரபலங்கள் மற்றும் EthereumMax நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் மற்றும் பலர் டிஜிட்டல் டோக்கன்கள் குறித்துத் தவறான தகவல்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2 மாத சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..! 2 மாத சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

 EthereumMax நிறுவனம்

EthereumMax நிறுவனம்

EthereumMax நிறுவனத்தின் நிர்வாகிகள், பல பிரபல விளம்பரதாரர்களுடன் இணைந்து சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் பிற விளம்பர நடவடிக்கைகள் மூலம் EthereumMax பற்றி முதலீட்டாளர்களுக்குத் தவறான தகவல்களை அளித்துள்ளனர்.

 EMAX டோக்கன்

EMAX டோக்கன்

EthereumMax மீதான தங்கள் கட்டுப்பாட்டை மறைத்தும், குறிப்பிடத்தக்க அளவிலான EMAX டோக்கன்களைப் பொதுச் சந்தையில் வர்த்தகத்திற்கு வைக்காமலும் ஏமாற்றியுள்ளனர் எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 EMAX காயின் விலை

EMAX காயின் விலை

EthereumMax நிறுவனம் Ethereum நெட்வொர்க்கில் ERC-20 விர்ச்சுவல் டோக்கன்களை வழங்குகிறது. காயின் மார்கெட் கேப் தளத்தின் தரவுகள் படி இன்று EMAX காயின் விலை 17.75 சதவீதம் சரிந்து $0.00000001688 டாலராக உள்ளது.

 பிரபலங்கள் கூட்டணி
 

பிரபலங்கள் கூட்டணி

EthereumMax நிறுவனம் சமுக வலைத்தளத்தில் பிரபலமாக இருப்பவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சமூக ஊடகங்களில் தங்களது கோடிக்கணக்கான ரசிகர்களிடம் EMAX கிரிப்டோகரன்சியை வாங்குமாறு கூறியதாகவும், விலை அதிகமாக இருக்கும்போது மட்டுமே விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டு உள்ளனர்.

 வழக்கு

வழக்கு

இப்படி EthereumMax நிறுவனம் தனது EMAX காயினைப் போலியாக விளம்பரப்படுத்தி முதலீட்டாளர்களையும், சாமானிய மக்களையும் ஏமாற்றியுள்ளதாக வழக்கு தொடப்பட்டு உள்ளது. மேலும் இந்தப் பிரபலங்கள் EMAX காயின் விலை உயர்வாக இருந்த போது விற்பனை செய்துவிட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kim Kardashian, Floyd Mayweather Jr Sued Over EthereumMax Cryptocurrency Scam

Kim Kardashian, Floyd Mayweather Jr Sued Over EthereumMax Cryptocurrency Scam கிம் கர்தாஷியன், ஃபிலாய்ட் மேவெதர் மீது மோசடி வழக்கு..! #EthereumMax
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X