கிம் கர்தாஷியன் கூட யாருன்னு பாத்தீங்களா.. எலான் மஸ்க் கில்லாடி தான்..!!

அமெரிக்கா: உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் விண்வெளி தொழில்நுட்பம், மின்சார கார்கள் என பல துறைகளிலும் கால் பதித்தவர். அப்படி எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஒரு நிறுவனம் ஹுயூமனாய்டு ரோபோ எனப்படும் மனித உருவ ரோபோவை வடிவமைத்துள்ளது. இதற்கு ஆப்டிமஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

எலான் மஸ்கின் இந்த ஆப்டிமஸ் ரோபோவை அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை கிம் கர்தாஷியன் தனது சமூகவலைதள பக்கம் வாயிலாக அறிமுகம் செய்துள்ளார். ஆப்டிமஸுடன் உரையாடியும் விளையாடியும் அவர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் அதனை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

கிம் கர்தாஷியன் கூட யாருன்னு பாத்தீங்களா.. எலான் மஸ்க் கில்லாடி தான்..!!

எலான் மஸ்க் ஆப்டிமஸ் ரோபோ-வை கிம் கர்தாஷியன் விளம்பரம் செய்ய முக்கியமான காரணம் அனைத்து தரப்பு மக்களையும் இந்த ரோபோ குறித்த தகவல் சென்றடைய வேண்டும் என்பதற்காக தான்.

அந்த வீடியோவில் கிம் கர்தாஷியன் தனது ரசிகர்களுக்கு தனது புதிய நண்பர் என கூறி ஆப்டிமஸை அறிமுகம் செய்கிறார். பின்னர் ஆப்டிமஸுடன் கலந்துரையாடுவது மற்றும் ராக்- பேப்பர்- சிஸர் விளையாடுவது போன்ற தொடர் வீடியோக்களை பதிவு செய்கிறார்.

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் உருவாக்கிய இந்த மனித உருவ ரோபோவின் விலை 20,000 முதல் 30,000 அமெரிக்க டாலர் வரை விலை கொண்டது என சொல்லப்படுகிறது.

இந்த வீடியோவில், கிம் உற்சாகமாக, " ராக்-பேப்பர்-சிஸர்" என கூறி ஆப்டிமஸுடன் விளையாடுகிறார். அதற்கு ஆப்டிமஸ் கைகளை உயர்த்தி சம்மதம் தெரிவிக்கிறது. கிம் கர்தாஷியன் முதலில் விளையாடுகிறார், ஆனால், ஆப்டிமஸ் அதில் தோற்றுவிடுகிறது. கிம் கர்தாஷியன் ரோபோவை கிண்டல் செய்து சிரிக்கிறார். “ஓ! நீ கொஞ்சம் ஸ்லோ, நான் உன்னை தோற்கடித்துவிட்டேன்” என கிம் கூறுகிறார்.

இந்த தோல்விக்கு பதிலளிக்கும் விதமாக, ரோபோ தனது கைகளை ஒரு சைகை மூலம் உயர்த்துகிறது. பொதுவாக மனிதர்கள் இப்படி தான் அடிக்கடி விரக்தியை வெளிப்படுத்துவார்கள். ரோபோவும் மனிதர்களை போலவே கைகளை உயர்த்தி ஆச்சர்யப்படுத்தியது.

பின்னர் கிம் கர்தாஷியன் வெளியிட்ட மற்றொரு வீடியோவில் ஆப்டிமஸுடன் கலந்துரையாடுகிறார். அப்போது கிம் கை அசைத்து, "உன்னால் இதைச் செய்ய முடியுமா?" என கூறி கையால் லவ் சிம்பலான இதய வடிவத்தை உருவாக்குகிறார்.

அப்போது, அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில், ரோபோவும் அப்படியே லவ் சிம்பலை கொண்டு வருகிறது. உடனே கிம் ஆச்சரியத்தில் திகைத்துப்போய், இதை எப்படி செய்வது என உனக்கு தெரியும் என ஆச்சர்யமாக கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் ஆப்டிமஸின் திறமையை கண்டு வியப்புடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+