இந்தியாவில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த மொபெட்களில் லூனாவும் ஒன்று, பின்னர் காலப்போக்கில் புதிய வாகனங்களின் வருகை, வர்த்தகம் பாதிப்பு ஆகியவற்றின் மூலம் அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து இப்போது லூனா மீண்டும் இந்திய சாலைகளில் கலக்க வருகிறது.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இ-லூனா என்ற மல்டி யுடிலிட்டி e2W ஸ்கூட்டர் புதிய எலக்ட்ரிக் அவதாரத்தில் கைனடிக் கிரீன் என்ற பெயரில் அறிமுகமாகிறது. இது லூனாவின் அபிமானிகள் குறிப்பாக மூத்த குடிமக்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் கைனடிக் கிரீன் இ லூனா புக்கிங்கை நீட்டித்துள்ளது.

புதிய ஜெனரேஷன் இ லூனாவை கைனடிக் கிரீன் வெப்சைட்டில் ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்யலாம். குடியரசு தினம் முதல் புக்கிங் செய்யலாம். இ லூனா ஒரு ஸ்டர்டி டியூரபிள் எலக்ட்ரிக் வாகனமாக இந்திய சாலைகளுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டது.
பெரிய மெட்ரோ நகரங்களில் மட்டுமல்லாமல் சிறு நகரங்களில் உள்ள சாலைகளிலும் எளிதாக செல்லும் வகையில் அமைந்துள்ளது. இது கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கும் ஏற்றதாக உள்ளது. வழக்கமான பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக சிறந்ததொரு படைப்பாக விளங்குகிறது என்று கைனடிக் கிரீன் நிறுவனர் மற்றும் சிஇஓ சுலாஜியா ஃபிரோதியா மோத்வானி கூறியுள்ளார்.
விரைவில் அறிமுகமாக உள்ள லூனா இவி பற்றி கைனடிக் கிரீன் எந்தவித விவரங்களையும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும் அதன் டீஸர் இமேஜ் லூனாவின் வெளிப்புற டிசைனை காட்டுகிறது. புதிய இ ஸ்கூட்டர் அதன் ஒரிஜினல் கைனடிக் லூனாவின் சிறிய பாடியையும் ரவுண்டு ஹெட்லைட்டையும் கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய தொழில்நுட்ப விவரக்குறிப்புகள், செயல்திறன் திறன்கள், வலுவான அம்சங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், புதிய பாரத் என்று சுலஜ்ஜா ஃபிரோதியா மோத்வானி கூறினார்.
இந்தியாவின் முதல் முற்றிலும் உள்நாட்டு மொபெட் இ-லூனாவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 52 கி.மீ. கைனடிக் கிரீன் இ லூனா சிறந்த லித்தியம்-அயன் பேட்டரியைப் பயன்படுத்துகிறது. சார்ஜிங் நேரம் 4 மணி நேரம், இன்றைய டிரெண்டுக்கு ஏற்றவாறு இலூனா வாகனம் அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இத்தளத்தில் செலுத்தப்படும் தொகையில் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை, சார்ஜர் மற்றும் ஃபேம் மானியம் (மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது) ஆகியவை அடங்கும். இந்தத் தொகையில் ஆர்டிஓ பதிவு, காப்பீடு, மற்றும் பாகங்கள் ஆகியவை சேர்க்கப்படவில்லை, இதை டீலரிடம் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
இ லூனாவின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.74,990. ஆனால் பிளிப்கார்ட் இதை தள்ளுபடி போக ரூ.71,990க்கு அளிக்கிறது. ஓஷன் புளூ, மல்பெர்ரி ரெட் ஆகிய இரு நிறங்களில் இ லூனா அறிமுகமாகிறது. ஒரு சார்ஜில் 110 கி.மீ. வரை செல்லலாம். 2 கி.வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இ லூனாவில் டெலஸ்கோபிக் போர்க் பிரன்ட் சஸ்பென்ஷன் மற்றும் இரட்டை ஷாக் ரியர் சஸ்பென்ஷன் உள்ளது. இதன் எடை 96 கிலோ.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்திய சந்தையில் லூனா நுழைகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications