மூன்றாம் சார்லஸ் மன்னர், 1937 ஆம் ஆண்டில் அவரது தாத்தா கிங் ஜார்ஜ் VI க்குப் பிறகு முடிசூட்டப்படும் முதல் பிரிட்டிஷ் மன்னர் ஆவார். ஆடம்பரங்கள், விருந்தினர்கள் என பல செலவுகள் குறைக்கப்பட்டு இந்த விழா நடக்க உள்ளது.
ஆனாலும் அரச குடும்பங்கள், பிரிட்டன் நாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பெரும்பாலான சார்லஸ் குடும்பம் உறுப்பினர்கள் இந்த முடிசூட்டும் விழாவில் கலந்துக்கொள்ள உள்ளனர். பிரிட்டன் அரசு பாரம்பரியத்திற்கு ஏற்ப, மூன்றாம் சார்லஸ் மன்னர் தனது தாயார் இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகளுக்கு முன்பு முடிசூட்டு விழாவின் போது அணிந்திருந்த முக்கிய நகைகளையும், பொருட்களையும் பயன்படுத்த உள்ளார்.

இந்த நிகழ்வில் மூன்றாம் சார்லஸ் பிரிட்டன் நாட்டு மன்னராக மூடிசூட்டப்படுவது மட்டும் அல்லாமல் அவருடைய இரண்டாவது மனைவி கமிலா ராணியாக முடிசூட்டப்பட உள்ளார்.
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மே 6ஆம் தேதி லண்டன் நேரத்தின் படி காலை 11 மணி முதல் நிகழ்ச்சிகள் துவங்கும். மூடிசூட்டப்படும் விழாவை தொடர்ந்து மூன்று நாட்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே கோலாகலமாக இருப்பது மட்டும் அல்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும்.

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவின் அரசு குடும்பத்தின் பாரம்பரியமான அடையாளமாக விளங்கும் கிரீடம் அவரது தலையில் வைக்கப்படும், இதேபோல் ராணியாக முடிசூட்டப்பட உள்ள கமிலா தலையிலும் கிரீடம் வைக்கப்படுவது முக்கிய நிகழ்வாக இருக்கும்.
ஊர்வலம்: மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரை மார்டன் வைர விழா சேரியட் வண்டியில் பயணம் செய்வார்கள். இரண்டாம் எலிசபெத் மகாராணி-யின் 60வது ஆட்சி ஆண்டை நினைவுகூரும் வகையில் இந்த மார்டன் வைர விழா சேரியட் வண்டி உருவாக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் இருந்து மூடிசூட்டப்பட்டு திரும்ப வரும் போது அதாவது நடந்து செல்லும் தூரத்திற்கு மட்டும் 260 ஆண்டுகள் பழமையான கோல்ட் சேரியட் வண்டியில் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா பயணிக்க உள்ளனர்.
260 ஆண்டுகள் பழமையான கோல்ட் சேரியட் வண்டி 4 டன் எடை கொண்டது, சுமார் 8 குதிரைகள் இழுக்க வேண்டும். இந்த சேரியட் வண்டி-க்கு முன்பு சுமார் 4,000 ஆயுதப்படை வீரர்கள் ஒரு மைல் நீள ஊர்வலத்தில் பாதுகாப்புக்கு வருவார்கள்.

முடிசூட்டுதல்: மூன்றாம் சார்லஸ் மன்னர் முடிசூட்டுவதற்காக, சுமார் 700 ஆண்டுகள் பழமையான முடிசூட்டுப்படும் நாற்காலியில் அமர்ந்திருப்பார். மூன்றாம் சார்லஸ் மன்னர் 2.2 கிலோ எடையுள்ள செயின்ட் எட்வர்ட் கிரீடத்தை அணிவார்.
கமிலாவின் கிரீடம் : பிரிட்டன் நாட்டின் ராணியாக மூடிசூட்டப்பட உள்ள கமிலா கோஹினூர் வைரம் கொண்ட கிரீடத்தை அணியவில்லை என ஏற்கனவே அறவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக அவர் ராணி மேரி கிரீடத்தை அணிவார்.

முக்கிய விருந்தினர் பட்டியல்: வாழ்நாளில் ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்விற்கு பல்வேறு தரப்பு மக்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன், இந்திய துணைத் கவர்னர் ஜக்தீப் தன்கர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலைஞர் மஞ்சு மல்ஹி மற்றும் பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஆகியோர் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications