பிரிட்டீஷ் ஏசியன் டிரஸ்ட்டின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக இந்திய பில்லியன் தொழிலதிபர்களான நிகில் காமத், நீர்ஜா பிர்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறக்கட்டளையை மன்னர் மூன்றாம் சார்லஸ் தான் வேல்ஸின் இளவரசராக இருந்தபோது நிறுவினார்.
2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட் தெற்காசியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது.

Zerodha நிறுவனர் நிகில் காமத் எனது நியமனத்தின் மூலம் இந்த டிரஸ்ட் புதுமையான மற்றும் முன்னோடி சமூக நிறுவனமாக செயல்படுவதற்கு பாடுபடுவேன். இந்த வாய்ப்பின் மூலம் பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட்டின் இந்திய ஆலோசனைக் குழுவில் இடம் பெறுவது பெருமையாக இருக்கிறது. சமூகத்தில் உள்ள சிக்கலான சவால்களை தீர்ப்பதற்கு பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.
ஜிரோதாவின் இணை நிறுவனரான நிகில் காமத், பில்கேட்ஸ், வாரன் பஃபெட்டின் தி கிவ்விங் பிளேட்ஜ் அறக்கட்டளையில் இணைந்த இளம் இந்திய தொழில் அதிபர் ஆவார். இதன்மூலம் தமது சொத்தில் பாதி அளவை அறக்கொடையாகத் தர வேண்டும்.
ஆதித்யா பிர்லா கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீர்ஜா பிர்லா இந்தியாவில் நிலவும் உடல்நலப் பிரச்னைகளை தீர்ப்பதில் முயற்சிகளை எடுக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் மக்களுக்குப் பல்வேறு நன்மைகளை பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட் செய்து வருகிறது. இது பாராட்டத்தக்கதாகும். அப்பேர்ப்பட்ட பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்டில் இணைவது பரவசமாக இருக்கிறது. இந்திய ஆலோசனைக் குழுவில் சேர்ந்து இந்தியாவில் நிலவும் மனநலப் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கைகளை எடுப்பேன் என்றார் நீர்ஜா பிர்லா.


Click it and Unblock the Notifications