முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த டிசம்பர் 26-ம் தேதி தனது 92-வது வயதில் வயது முதிர்வால் காலமானார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை காலை 11.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் புது தில்லியில் உள்ள நிகம்போத் காட் பகுதியில் நடைபெறும்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் டெல்லியில் உள்ள நிகாம்போத் காட்டில் நடைபெற்று வருகிறது. இறுதி சடங்கிற்கு முன்பு ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பலர் நிகாம்போத் காட்டிற்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிகம்போத் காட்டில் ராணுவ மரியாதை செலுத்துவதற்கு முன்பு கவர்னர் திரௌபதி முர்மு இறுதி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகப் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சர் மணீஷ் கோபின் ஆகியோர் இந்தியா வந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பல போராட்டங்களுக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெல்லியில் நினைவிடம் அமைக்க மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் 33 ஆண்டுகள் உழைத்த மன்மோகன் சிங் நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதி மறுப்பதாக நேற்று இரவு காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில் மத்திய அரசு நினைவிடம் அமைக்க ஒப்புதல் அளித்தது.
மன்மோகன் சிங் வெளிநாட்டில் தனது படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பி பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி வந்த போது, அவர் பொருளாதாரத்தில் செய்த பல்வேறு ஆய்வுகள் மூலம் அப்போதைய மத்திய அரசின் பார்வைக்கு வந்தார்.
இதன் மூலம் 1970களில் அவருக்கு வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் பதவி கிடைத்தது. இது தான் அவருடைய அரசியல் வாழ்க்கைக்குப் பிள்ளையார் சுழியைப் போட்டது.
இதன் பின்பு 1982-1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கவர்னராக பணியாற்றினார். இதை தொடர்ந்து அடுத்த முக்கிய பதவியாக அப்போதை பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசின் நிதியமைச்சராக முதல் சீக்கிய நபர் என்ற பெருமையுடன், பொறுப்புடன் நாற்காலியில் அமர்ந்தார்.


Click it and Unblock the Notifications