சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
38 வயதாக கூடிய அஸ்வின் ரவிச்சந்திரன் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பவுலர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

முன்னதாக அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் அஸ்வின் ரவிச்சந்திரன் கல்வி தகுதி மற்றும் அவருடைய குடும்ப பின்னணி குறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.
பொதுவாக விளையாட்டில் உச்சத்தில் இருப்பவர்கள் படிப்பில் பெரிய அளவில் இருப்பது கிடையாது, இதற்கு இந்திய கிரிக்கெட் அணியிலேயே பல உதாரணங்களை காட்ட முடியும், ஆனால் நம்ம அஸ்வின் கொஞ்சம் வித்தியாசமானவர்.
அஸ்வினை பொருத்தவரை சென்னை பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியில் தொடக்க கல்வியை பெற்றவர். பின்னர் செயின்ட் பீடே பள்ளியில் மேல்நிலை பள்ளி படிப்பை முடித்தார். இதனை அடுத்து சென்னை எஸ்எஸ்என் கல்லூரியில் ஐடி பிரிவில் பிடெக் மேற்படிப்பை முடித்தார். தான் விளையாட்டு மட்டுமில்லாமல் கல்வியிலும் சிறந்த திகழ்ந்தேன் என ஒரு பேட்டியில் அவரே குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரனும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். ரவிச்சந்திரன் கிளப் லெவல் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் விளையாடியவர். அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருந்தாராம். கூட்டு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஸ்வினுக்கு கிரிக்கெட் விளையாட்டுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாங்கித் தந்து இந்த விளையாட்டில் அவர் தொடர்ந்து பயிற்சி பெற்று வெற்றி அடைய காரணமாக இருந்தது அவருடைய தாத்தா என சொல்லப்படுகிறது.
அஸ்வினின் பெற்றோர் வேலையில் பிஸியாக இருந்த நிலையில் அவருக்கு பராமரிப்பாளராக இருந்த பெண்மணியும் இவருக்கு கிரிக்கெட்டில் பெருமளவில் ஊக்கமளித்தாராம். அஸ்வினின் ஒட்டு மொத்த குடும்பமும் அவர் கிரிக்கெட்டில் உயரத்தை எட்ட தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி உறுதுணையாக நின்றுள்ளது.
அஸ்வின் தனது 9 வயதிலிருந்து கிரிக்கெட் விளையாட தொடங்கி விட்டார் . பயிற்சியாளர் சந்திர சேகர ராவின் தலைமையில் ஒய்எம்சிஏ அணியின் வீரராக இவர் தோன்றினார். பின்னர் செயிண்ட் பீடே பள்ளியில் சேர்ந்த போது அங்கே இருந்த கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற தொடங்கினார். அப்போது சி கே விஜயகுமார் இவருடைய பயிற்சியாளராக இருந்தார்.
பின்னர் முன்னாள் வீரர்கள் டபிள்யூ வி ராமன், சுனில் சுப்பிரமணியன் ஆகியோரும் இவரின் பந்துவீச்சு திறமைகளை மேம்படுத்த உதவியுள்ளனர். 17 வயதுக்குட்பட்ட வீரர்களுக்காக கிரிக்கெட் அணியில் இவர் தொடக்க ஆட்டக்காரராகவும் களமிறங்கியுள்ளார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications