காந்தி நகர்: உலகளவில் வாய்ப்புகளின் தேசம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு அமெரிக்காவை நோக்கி கையைக் காட்டிவிடலாம். லட்சியத்துடன் செயல்பட்டால் அங்கு நிச்சயம் வெற்றி பெறலாம். இதனால் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் ஏராளமான இந்தியர்கள் ஆண்டுதோறும் அமெரிக்காவை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். ஆனால் அந்நிய நாட்டில் ஒரு தொழில் செய்து வெற்றி பெறுவது என்பது தலைகீழாக நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பதற்கு சமமாகும். அதிலும் அமெரிக்காவில் போட்டிக்குப் பஞ்சமேயில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சளைக்காமல் செய்த முயற்சி காரணமாக குஜராத்தை சேர்ந்த கஞ்சிபாய் மஞ்சு தேசாய் என்பவர் ஹோட்டல் தொழிலில் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் ஹோட்டல் தொழிலைத் தொடங்கியுள்ள முதல் இந்தியர் இவர்.

1940களின் தொடக்கத்தில் சான் பிரான்சிஸ்கோவின் மத்தியில் இருந்த கோல்டுபீல்டு ஹோட்டலை விலைக்கு வாங்கினார் தேசாய். அத்துடன் தனது படேல் சமூகத்தினரை அமெரிக்காவுக்கு வரவழைத்து ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்யும் ஆர்வத்தைத் தூண்டினார். இவரது முயற்சிக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் தோன்றியபோதும் தனது கடின முயற்சிகளால் அவற்றை எளிதாக கடந்து வந்தார். அவரது இந்த அயராத உழைப்பு அமெரிக்க மண்ணில் கஞ்சிபாய் மஞ்சு தேசாய்க்கு நல்ல மதிப்பைப் பெற்றுத் தந்தது.
1937இல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் தேசாய். தொடக்கத்தில் நிறவெறி, சட்டவிரோத குடிமகன் நிலைமை, மொழிப்பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பி தனது குடும்பத்தை கரையேற்றுவதற்கு முயன்றார். ஆனாலும் அவருக்குள் குடியிருந்த ஹோட்டல் வெறி மீண்டும் அமெரிக்காவுக்கே அவரை அழைத்துச் சென்றது. இந்த முறை ஒரு பழத்தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்து பழம் பறிக்கும் வேலை செய்தார். சொற்ப சம்பளம், செல்லுபடியாகாத குடியுரிமை அவரை தொடர்ந்து வாட்டியது.
1940ல் பியர்ல் ஹார்பர் மீது ஜப்பானிய படைகள் அமெரிக்க கடற்படையை நிர்மூலம் செய்தபோது தான் தேசாய்க்கு ஒரு வழி பிறந்தது. அது ஹோட்டல் தொழில். தாக்குதலுக்கு பயந்து அமெரிக்காவை காலி செய்ய நேரிட்ட ஒரு ஜப்பான் பெண்மணி தான் நடத்தி வந்த ஹோட்டலை அப்படியே விட்டுவிட்டு நாடு திரும்பும் போது அதை தேசாய்க்கு கொடுத்துவிட்டு சென்றார். இதைத் தொடர்ந்து ஹோட்டலை நடத்திய தேசாய் முதலில் சிங்கிள் ரூம்களை மட்டுமே வாடகைக்குக் கொடுத்து வந்தார்.
விருந்தாளிகளை கடவுள்களாக பாவிக்க வேண்டும் என்ற இந்திய மரபை பின்பற்றி தனது ஹோட்டல் தொழிலை கடினப்பட்டு நடத்தி வந்தார். படிப்படியாக அவருக்கு நல்ல காலம் வரத் தொடங்கியது. தனது உறவுகளான படேல்களை அழைத்து வந்து ஹோட்டல் தொழில் குறித்து ஆர்வத்தைக் கிளப்பினார். ஹோட்டல்களை குத்தகைக்கு வாங்கும் முயற்சியில் அவர்களை ஈடுபடுத்தினார். விடாமல் மேலும் மேலும் பல ஹோட்டல்களை குத்தகைக்கு எடுத்து படேல்கள் நடத்தி வரத் தொடங்கினர். இதற்காக கஞ்சிபாய் மஞ்சு தேசாய் மிகப் பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. இருந்தும் அசராமல் அவர் பல ஹோட்டல்களை வாங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். அவரது இந்த தொழில் வெற்றி அடுத்தடுத்த சந்ததியினருக்கு ஒரு பாடமாக விளங்குகிறது.
தேசாயின் இந்த சாதனை காலங்கடந்தும் அவரது பெயரைச் சொல்லும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications