பெண்ணாக இருப்பதால் மட்டுமே 'இந்த' பிரச்சனை வந்தது.. ரூ.18000 கோடிக்கு சொந்தக்காரர் கிரண்..!!

இந்தியாவில் இன்று பல பெண்கள் சொந்தமாகத் தொழில் துவங்கி பெரும் தொழிலதிபராக உயர்ந்து மாஸ் காட்டி வரும் வேளையில், இதற்குப் பிள்ளையார் சுழி போட்டது பெங்களூர் பெண்ணான கிரண் மஜும்தார்-ஷா தான்.

இவர் வெறும் தொழிலதிபர் மட்டும் அல்லாமல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து பொருட்களை உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து சொந்தக் காலில் நின்று பெண் பில்லியனர்கள் பட்டியலில் பல ஆண்டுகள் முதல் இடத்தைத் தக்க வைத்துப் பல கோடி இந்திய பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது.

பெண்ணாக இருப்பதால் மட்டுமே 'இந்த' பிரச்சனை வந்தது.. ரூ.18000 கோடிக்கு சொந்தக்காரர் கிரண்..!!

இந்த நிலையில் சமீபத்தில் Zerodha நிறுவனர் நித்தின் காமத்-ன் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கிரண் மஜும்தார்-ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது தனது குடும்பம், பயணம், கல்வி, முயற்சிகள், தோல்விகள், போராட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார் கிரண் மஜும்தார்-ஷா.

கிரண் மஜும்தார் ஷா கர்நாடகாவின் பெங்களூரில் மார்ச் 23, 1953 இல் பிறந்தார். பெங்களூரின் பிஷப் காட்டன் கேர்ள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வியை முடித்த பின்பு, பெங்களூர் பல்கலைக்கழகத்தில் 1973 இல் விலங்கியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

மருத்துவராக வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது, ஆனால் அதற்கான ஸ்காலர்ஷிப் அவரால் பெற முடியவில்லை. இவரது தந்தை ராசேந்திர மஜும்தார், இவர் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்தில் தலைமை ப்ரூ மாஸ்டராக இருந்தார். இதன் மூலம் விஜய் மல்லையாவும் கிரண் மஜும்தார் ஷா-ம் இளம் வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்து இன்று வரையில் நண்பர்களாக இருந்தனர்.

மகளையும் தனது ப்ரூ மாஸ்டராக உயர்த்த வேண்டும் எனக் கனவும் ராசேந்திர மஜும்தார், கிரண்-ஐ மதுபானம் தயாரிப்பதில் முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடருமாறு அவர் அறிவுறுத்தினார். இதில் கிரண் அதிர்ச்சி அடைந்தாலும் தனது தந்தையின் பணியைச் சிறுவயதில் இருந்தே பார்த்த காரணத்தால் உடனே இதுதான் நமக்கான வழி என முடிவு செய்தார்.

ப்ரூவிங் துறையில் பட்டம் பெறவும், தொழில்நுட்ப அளவில் இதில் நிபுணத்துவம் பெற ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மால்டிங் மற்றும் ப்ரூயிங் படிப்பதற்காகப் பயணம் செய்தார். மேலும் 1975 இல், அவர் ஒரு மாஸ்டர் ப்ரூவராகப் பட்டம் பெற்றார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவருடைய கல்லூரியில் இவர் பயின்ற வகுப்பில் இவர் மட்டுமே பெண்.

மதுபான தயாரிப்பில் பெண்கள் பொதுவாக இருக்கமாட்டார்கள், ஆனால் இதை முதல் முறையாக ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் உடைத்தார் கிரண். ஆஸ்திரேலியாவில் தனது கல்வியை முடித்த பிறகு, 1976 இல் இந்தியாவுக்குத் திரும்பினார்.

இந்தியா வந்த உடன் பெரும் கனவுடன் தானும் தனது தந்தை போலவே மதுபான தொழிற்சாலை ப்ரூவிங் மாஸ்டராகச் சேர முயற்சி செய்தால். இந்தியாவில் யாரும் இவருக்கு வேலை கொடுக்கவில்லை, காரணம் இவர் பெண் என்பதால் மட்டுமே, அனைவரிடமும் ஒரே பதில் தான். மதுபான தொழிற்சாலையில் ஒரு பெண்ணை எப்படிச் சேர்ப்பது என்பது தான்.

இந்தியாவில் வேலைவாய்ப்புத் தேடலில் தோல்வி அடைந்த கிரண் மஜும்தாருக்கு 1978 இல் ஒரு ஸ்காட்லாந்து நிறுவனத்திடமிருந்து ஒரு வேலைவாய்ப்புக் கிடைத்தது. உடனே வேலையை ஏற்றுக்கொண்டார், ஆனால் ஸ்காட்லாந்து செல்லும் முன்பு டெல்லியில் இருக்கும் அந்நிறுவன தொழிற்சாலையில் பயிற்சி எடுக்கச் சில நாட்கள் தங்க வேண்டும்.

இதற்காக டெல்லிக்குப் புறப்பட்ட போது தான் அயர்லாந்து நாட்டின் பயோடெக் தொழில்முனைவோரைத் தற்செயலாகச் சந்தித்தார் கிரண். பரோடாவில் இருந்து டெல்லிக்கு ராஜதானி எக்ஸ்பிரஸில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிரண் தொழில் துவங்கவும் முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார். இதில் ஒரு முதலீட்டாளரைச் சந்திக்க டெல்லியில் வாய்ப்பு கிடைத்து.

பெண்ணாக இருப்பதால் மட்டுமே 'இந்த' பிரச்சனை வந்தது.. ரூ.18000 கோடிக்கு சொந்தக்காரர் கிரண்..!!

இந்த ஒரு சந்திப்பு தான் கிரண் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அயர்லாந்து நாட்டின் பயோடெக் தொழில்முனைவோர் கிரண் மஜூம்தாரின் என்சைம் உற்பத்தியில் அவரின் திறனை கண்டு வியந்தார். பீர் உற்பத்தியின் அடிப்படையே என்சைம் உருவாக்குவது தான், இதைத் தான் ப்ரூவிங் எனக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த என்சைம் தொழில்நுட்பத்தை மாற்று வழியில் பயன்படுத்தலாம் என ஐடியா கொடுத்தது மட்டும் அல்லாமல் இந்தியாவில் கிரண் தயாரிக்கும் என்சைம்-ஐ அட்வான்ஸ் தொகை கொடுத்து முன் விற்பனைக்குப் புக் செய்யும் ஆஃபரையும் அந்த அயர்லாந்து பயோடெக் தொழில்முனைவோர் கொடுத்தார்.

இந்த ஐடியாவில் இம்பிரஸ் ஆன கிரண் ஸ்காட்லாந்து வேலையைத் தூக்கி எறிந்து பெங்களூர் ரயில் ஏறினார். கையில் இருக்கும் 10000 ரூபாய் சேமிப்பை வைத்து நிறுவனத்தைக் கார் கராஜில் துவங்கினார், ஆனால் இந்த முதலீடு போதுமானதாக இல்லை. எனவே வங்கிகளின் கதவை தட்ட துவங்கினார். மீண்டும் அதே பதில் பெண்கள் தொழில் துவங்குவதாக, அவர்களுக்கு யாரை நம்பி கடன் கொடுப்பது என வங்கிகள் பெண்ணாக இருப்பதாலேயே பல கேள்விகளை முன்வைத்தனர்.

இப்போது தான் கனரா வங்கியின் ஒரு கிளை மேலாளர் கிரண் முயற்சியைப் பார்த்து கடன் கொடுத்தார், அடுத்த சில வருடத்தில் ஸ்காட்லாந்து மட்டும் அல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு என்சைம் ஏற்றுமதியைத் துவங்கினார். இதன் பின்பு 20 ஏக்கரில் தொழிற்சாலை, அதிகப்படியான ஊழியர்கள், பல வர்த்தகம் மற்றும் நிறுவன கைப்பற்றல், எலக்ட்ரானிக் சிட்டி அருகில் மாபெரும் தொழிற்சாலை அலுவலகம் எனப் பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்தார்.

பெண்ணாக இருப்பதால் மட்டுமே பல பிரச்சனைகளை Kiran Mazumdar-Shaw எதிர்கொண்டுள்ளதை இந்தப் பேட்டியில் தெரிவித்தார். இன்று 18000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 28000 கோடி ரூபாய் மதிப்பிலான பயோகான் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+