மும்பை: முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் விஜய் மல்லையா அவரது மகனுக்கு இங்கிலாந்தில் ஆடம்பரமான முறையில் திருமணத்தை நடத்தியுள்ளார். அதில் விஜய் மல்லையாவின் குழந்தை பருவ நண்பர் மற்றும் இந்திய நிறுவனமான பயோகானின் (Biocon) தலைவர் கிரண் மஜும்தார்-ஷா கலந்துகொண்டுள்ளார்.
சித்தார்த்த மல்லையா, ஜாஸ்மின் சாண்டியாகோ ஆகிய இருவருக்குமான இந்த திருமணம் இங்கிலாந்தில் உள்ள அவரது தந்தையின் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் (Hertfordshire) தோட்டத்தில் நடைபெற்றது. மேலும் இந்த திருமணத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஜோடிக்கு 1 ஆம் தேதி அன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடத்தது. அதைத் தொடர்ந்து 2-ஆம் நாள் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

2ம் நாள் அன்று நடைபெற்ற திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பேஷன் டிசைனர் மனோவிராஜ் கோஸ்லா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் கிரண் மஜும்தார்-ஷா காணப்பட்டார். தொழிலதிபர் விஜய் மல்லையா பெங்களூரில் வளர்ந்தவர் அவரது பக்கத்து வீட்டுக்காரர் தான் பயோகான் நிறுவனத்தின் செயல் தலைவரான கிரண் மஜும்தார்-ஷா.
மஜும்தார்-ஷாவைத் தவிர, இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) முன்னாள் தலைவரும், லலித் மோடியும் திருமண விழாவில் பங்கேற்றனர். 900 கோடிக்கு மேல் கடன் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையா இந்தியாவில் தேடப்படும் ஒரு நபர். மேலும் அதில் பங்கேற்றுள்ள லலித் மோடியின் மேல் வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஜமைக்கா கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும் 2ம் நாள் திருமணத்தில் கலந்து கொண்டார்.
சித்தார்த்தா மல்ஹோத்ரா மற்றும் ஜாஸ்மின் திருமணம்: இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா மற்றும் அவரது முதல் மனைவி சமிரா தியாப்ஜி மல்லையா ஆகிய இருவருக்கும் மகனாகப் பிறந்தவர் சித்தார்த்தா மல்ஹோத்ரா ஆவார். சித்தார்த்தா மல்ஹோத்ரா அவரது தந்தையின் லேடிவாக் தோட்டத்தில் அமைந்துள்ள ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் ( Hertfordshire) டீவின் என்னும் கிராமத்தில் தனது காதலியான ஜாஸ்மினை மணந்தார்.
உலகெங்கிலும் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் திருமணத்திற்காக டீவின் வந்தடைந்தனர். டீவின் கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் நடந்த முதல் விழாவிற்கு, மணமகள் வெள்ளை நிற திருமண கவுன் அணிந்திருந்தார், அதே நேரத்தில் மணமகன் பச்சை நிற டாக்சிடோவில் அழகாக இருந்தார். விழாவைத் தொடர்ந்து லேடிவாக் தோட்டத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இது 30 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்றது. பல நீச்சல் குளங்கள், நீரூற்றுகள், அவுட்ஹவுஸ்கள் மற்றும் டென்னிஸ் மைதானங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மறுநாள் இந்து முறைப்படி இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இந்த முறை, மணமகள் ஜாஸ்மின் சாண்டியாகோ சிவப்பு நிற லெஹங்காவை அணிந்திருந்தார்.


Click it and Unblock the Notifications