இந்தியாவின் முன்னணி பெண் பணக்காரர்களில் ஒருவரும், பயோகான் நிறுவனத்தின் நிறுவனரான கிரண் மஜூம்தார் ஷா, பெங்களூரு நகரத்தின் உள்கட்டமைப்பு பிரச்சினைகளைப் பற்றி நீண்ட காலமாக விமர்சனம் செய்து வருகிறார்.
பெங்களூரின் வளர்ச்சியின் முகமாக கருதப்படும் கிரண் மஜூம்தார் ஷா, இந்நகரின் மோசமான டிராபிக், மழை வெள்ள பிரச்சனை, கழிவுகள், முதலீடுகளும் - நிறுவனங்கள் வெளியேறுவது குறித்து நகரின் நிர்வாக அமைப்பையும், கர்நாடக அரசையும் தொடர்ந்து விமர்சனம் செய்துள்ளது. ஆனால் இந்த முறை வெளிநாட்டவர் முன்னணிலையில் பெங்களூரின் மோசமான நிலை அவரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.

கிரண் மஜூம்தார் ஷா சமூக ஊடக தளமான எக்ஸ் வெளியிட்ட பதிவில் ஒரு வெளிநாட்டு வணிகர் ஒருவர் பெங்களூரில் தன்னை பார்க்க வந்தாகவும், அவர் பகிர்ந்துள்ளா கருத்துக்களை தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கிரண் மஜூம்தார் ஷா-வின் பெங்களூரின் டிராபிக் பிரச்சனையை தாண்டி இது நகரத்தின் சாலைகள் மற்றும் குப்பை பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
டிவிட்டர் பதிவு
பெங்களூருவில் உள்ள பயோகான் பார்க் வளாகத்திற்கு வந்த அந்த வெளிநாட்டு வணிகர், கிரண் மஜூம்தார்-ஷாவிடம், "சாலைகள் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளன? சுற்றிலும் ஏன் இவ்வளவு குப்பை இருக்கிறது? அரசு முதலீட்டை ஊக்குவிக்க விரும்பவில்லையா?" என்று கேட்டுள்ளார். இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரு, இத்தகைய அடிப்படை பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் ஒப்பீடு
அந்த வெளிநாட்டு வணிகர் கடைசியாத சீனாவிலிருந்து வந்திருந்ததால், இந்தியாவை அதனுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். "சீனாவிலிருந்து வந்திருக்கிறேன், இந்தியா ஏன் தனது செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த முடியவில்லை? குறிப்பாக, இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போது சூழ்நிலை மிகவும் சாதகமாக இருக்கும் போது? ஏன் இத்தகைய சூழ்நிலை நிலவுகிறது" என்று அவர் கூறியதாக கிரண் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ORR சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் சிஇஓ பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாகவே பெங்களூர் முழுவதும் சாலைகள் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து கிரண் மஜூம்தார் ஷா-வின் தற்போதைய பதிவு கர்நாடக அரசுக்கு பெரும் பிரச்சனையாக விளங்கி வருகிறது.
கிரண் மஜூம்தார்-ஷா, பெங்களூருவின் சிதைந்து வரும் உள்கட்டமைப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications