மளிகை கடைகளை காலி செய்ய வரும் Blinkit, Zepto, Swiggy.. அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்..!!

இந்தியாவில் காலம் காலமாக இயங்கி வரும் மளிகை கடைகளை, வேகமாக வளர்ந்து வரும் குவிக் காமர்ஸ் தளங்களால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. மக்களுக்கு இணைய வசதியும், Blinkit, Zepto, Swiggy போன்ற குவிக் காமர்ஸ் நிறுவனங்களின் வேகமாக விரிவாக்கம் காரணத்தால் குறைந்த காலக்கட்டத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

கொரோனாவுக்கு முன்பு புட் டெலிவரி, ஈகாமர்ஸ் டெலிவரி மட்டுமே இருந்த இந்திய டிஜிட்டல் வர்த்தக சந்தையில் குவிக் காமர்ஸ் என்ற புதிய வர்த்தகம் உருவாகி பெரும் புரட்சியை செய்தது. முதலில் இத்துறையை டார்கெட் செய்து வந்தது செப்டோ மட்டுமே, ஆனால் பின்னாளில் Blinkit, Swiggy நிறுவன கைப்பற்றல் மற்றும் சேவை மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இத்துறைக்குள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மளிகை கடைகளை காலி செய்ய வரும் Blinkit, Zepto, Swiggy.. அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்..!!


டேட்டம் என்னும் சந்தை ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, இந்திய மக்கள் ஆன்லைன் மூலம் அதிகப்படியாக மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை ஷாப்பிங் செய்யும் காரணத்தால் மளிகை கடைகளுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்தியாவில் மளிகை பொருட்கள் விற்பனையில் 2018 ஆம் ஆண்டு 95% ஆக இருந்த மளிகை கடைகளின் சந்தைப் பங்கீடு, 2023 ஆம் ஆண்டில் 92.6% ஆகக் குறைந்துள்ளது. மேலும், 2028 ஆம் ஆண்டில் 88.9% ஆக குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முழு முக்கியமான காரணம் குவிக் காமர்ஸ் தளங்கள் வழங்கும் வசதி மற்றும் வேகமான டெலிவரி தான்.

ஏற்கனவே குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு செல்ல துவங்கியிருக்கும் காரணத்தால் இந்த அளவீடு வேகமாக மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மளிகை கடைகள் நாட்டின் மூலை முடுக்குகளில் இருக்கும் மக்களை இணைக்கும் பாலமாக இருப்பது மட்டும் அல்லாமல் இப்பிரிவை சார்ந்து பல கோடி மக்களும், குடும்பங்களும் உள்ளது.

மக்கள் அதிகப்படியாக குவிக் காமர்ஸ் துறையில் நாடி சென்றால் மளிகைகளை மூடும் நிலை உருவாகும். இதேபோன்ற பிரச்சனை தான் இந்தியாவில் ஈகாமர்ஸ் ஆதிக்கம் செலுத்தும் போது உருவானது, இன்று வரையில் ரீடைல் நிறுவனங்கள் இதன் மூலம் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இதே நிலை தான் தற்போது மளிகை கடைகளுக்கும் வருகிறது என்பது ரீடைல் வியாபாரிகளின் புலம்பல்.

குவிக் காமர்ஸ் துறை 2024 ஆம் ஆண்டில் 74% வளர்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, 2023-2028 காலகட்டத்தில் 48% சிஏஜிஆர் வளர்ச்சியுடன், இது வேகமாக வளரும் ரீடைல் சேவைத் துறையாக மாறும் என்றும் Datum நிறுவனம் கணித்துள்ளது.

இதேவேளையில் குவிக் காமர்ஸ் சேவையை பயன்படுத்துவோர் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில், சுமார் 46% பேர் மளிகை கடைகளில் இருந்து பொருட்களை வாங்குவதை குறைத்துள்ளனர். மேலும், 82% க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதில் குறைந்தது 25% அளவு குவிக் காமர்ஸ் தளங்களுக்கு மாற்றியுள்ளனர். இதோடு, 5% வாடிக்கையாளர்கள் மளிகை கடைகளில் இருந்து முற்றிலுமாக வாங்குவதை நிறுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த மாற்றம் மூலம் குறிப்பிடத்தக்க நிதி தாக்கமும் உள்ளது, 2024 ஆம் ஆண்டில், சுமார் 10000 கோடி ரூபாய் மதிப்புள்ள விற்பனை மளிகை கடைகளிலிருந்து குவிக் காமர்ஸ் தளங்களுக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குவிக் காமர்ஸ் தளங்களின் மொத்த விற்பனையில் 21% ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+