இன்றெல்லாம் நம் வீட்டிற்கு அருகில் சின்ன மளிகை கடைகள் இயங்கி வருவதை காண முடியவில்லை. இதற்கு மிக முக்கிய காரணம் என்று பார்த்தால் மக்கள் அதிக அளவில் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்கின்றனர். ப்ளிப்கார்ட், செப்டோ, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட் போன்ற குவிக் காமர்ஸ் தளங்கள் அதிகரித்துவிட்டன. இதன் காரணமாக குவிக் காமர்ஸ் தளங்களுக்கும் மளிகை கடைகளுக்கும் பெரும் போட்டி நிலவி வருகிறது.
இந்தியாவில் இருக்கும் சுமார் 1.3 கோடி மளிகை கடைகளுக்கு தற்போது பொருட்களை ஹோம் டெலிவரி செய்யும் ஈகாமர்ஸ், குவிக் காமர்ஸ் நிறுவனங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மளிகை கடைகளில் மளிகை பொருட்கள் மற்றும் தினசரி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இவை அனைத்தும் FMCG நிறுவனங்களுக்கு முதுகெலும்பாக உள்ளன.

குறிப்பாக டயர் 2 டயர் 3 நகரங்களில் உள்ள மக்கள், இந்த கடைகளில் இருந்து தான் தங்களுக்கு தேவைப்படும் மளிகை பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். பெருநகரங்களில் மளிகை கடைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் அதற்காக சிலர் மாற்று வழிகளையும் கண்டுபிடிக்க தொடங்கியுள்ளனர்.
உதாரணமாக பெங்களூருவின் கோரமங்களாவில் உள்ள ஜெய்ராம் ஹெக்டே என்ற கடைக்காரர் தனது 2 மளிகை கடைகளை செப்டோவின் டார்க் ஸ்டோர்களாக மாற்றியுள்ளார். டார்க் ஸ்டோர் என்பது வர்த்தக நிறுவனங்களுக்கான கிடங்குகள் ஆகும். மக்கள் சென்று இங்கு நேரடியாக எந்த பொருட்களையும் வாங்க முடியாது. ஆன்லைன் தளங்கள் மூலமாகவே ஆர்டர் செய்ய முடியும்.
வேறு எந்த வழியும் இல்லை. குறைந்தபட்சம் எனக்கு இப்போதாவது இதிலிருந்து வருமானம் கிடைக்கிறது. காலத்திற்கு ஏற்ப காத்திருக்க வேண்டாம். நீண்ட காலத்திற்கு தகுந்த திட்டம் உங்களிடம் இருந்தால் உடனே மாறுங்கள் என்று ஜெய்ராம் கூறியுள்ளார்.
டார்க் ஸ்டோர்களாக மாறுவது சொந்தக் கடைகளை வைத்திருப்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். நொய்டாவில் உள்ள ஒரு பெரிய ஹவுசிங் சொசைட்டியில் குப்தா ஜெனரல் ஸ்டோரை நடத்தும் விபின் குமார் என்ற நபர், வாடகைக்கு இடத்தை பெற்று கடை நடத்தி வருகிறார். வாடகையும் தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது. வாடகை செலுத்திய பிறகு லாபம் ஈட்ட போதுமான விற்பனை இல்லை. இதன் காரணமாக நாங்கள் வெளியேற வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். தனது கடையின் வாடகைக்கு விபின் மாதம் 40,000 ரூபாய் செலுத்தி வருகிறார்.
மேலும் இது போன்ற மளிகை கடைகளை பாதிக்கும் மற்றொரு சிக்கல் என்னவென்றால் இங்கு வழங்கப்படும் அதிகரித்த தள்ளுபடிகள். அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்களின் கூட்டமைப்பு கடந்த மாதம் FMCG நிறுவனங்களுக்கு ஒரு கடிதம் எழுதியது. இந்த விரைவான வர்த்தக தளங்களின் விலை மற்றும் தள்ளுபடிகள் நாட்டின் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குவிக் டெலிவரி சேவை மற்றும் குறைந்த விலை போன்ற சலுகையின் காரணமாக மக்கள் இது போன்ற தளங்களில் அதிகமாக ஆர்டர் செய்கின்றனர். இதனால் மளிகை கடைகள் கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றன. நெஸ்லே, பார்லே, ஐடிசி, மரிகோ மற்றும் இமாமி போன்ற FMCG நிறுவனங்களின் மொத்த ஈகாமர்ஸ் விற்பனையில் 30 முதல் 50% குவிக் காமர்ஸ் தளங்களின் மூலம் நடைபெறுகிறது.
தற்போது அதிகரித்துள்ள குவிக் காமெர்ஸ் தலங்களின் வளர்ச்சியால் அருகில் உள்ள மளிகை கடைகள் மாற்று வழியை யோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications