கிஷோர் பியானி அவர்களின் மருமகனான விவேக் பியானி, 'பிராட்வே' என்ற புதிய கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி ரீடைல் வர்த்தக துறையில் மீண்டும் தலையெடுக்க பியானி குடும்பம் வந்துள்ளது. கிஷோர் பியானி குறித்து பலருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது, இவர் இந்தியாவின் முதல் ரீடைல் கிங்மேக்கர். பிக் பஜார், சென்ட்ரல், FBB, என பில பிரபலமான ரீடைல் பிராண்டுகளை உருவாக்கிய பியூச்சர் குரூப்-ன் நிறுவனர் ஆவார்.
கிஷோர் பியானியின் பியூச்சர் குரூப் சாம்ராஜ்ஜியத்தை ரிலையன்ஸ்-க்கு விற்பனை செய்வதில் அமேசான் தொடுத்த வழக்கு, இக்குழுமத்தின் நிலையை மொத்தமாக மாற்றியது. பியூச்சர் குரூப் -ன் பல்வேறு வர்த்தகத்திற்கு வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் தற்போது பெரும் பாதிப்பில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் ரீடைல் கிங் குடும்பம், டிஜிட்டல் வர்த்தகத்தில் வளர்ச்சியடைந்த பிராண்டுகளை ஊக்குவிக்கும் பியானி குடும்பம் 'திங்க்9' நிறுவனத்தின் கீழ் 'பிராட்வே' என்னும் பெயரில் புதிய co-retail space வர்த்தகம் தொடங்கப்பட்டுள்ளது.
விவேக் பியானி தலைமையில் நடிகர் மற்றும் தொழிலதிபரான ராணா டகுபதி, பெங்களூரின் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனமான சாலராபுரியா குழுமத்தின் அபூர்வா சாலராபுரியா மற்றும் அனாராக் நிறுவனத்தின் அனுஜ் பூரி ஆகியோருடன் இணைந்து இந்த பிராட்வே நிறுவனம் தொடங்கியுள்ளனர்.
எல்லோருக்கும் Co-Working space பற்றி தெரியும், சொந்தமாக முழு அலுவலகத்தை வாடகைக்கு பெற முடியாத நிறுவனங்கள், ஒரு முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட அலுவலகத்தில் சீட் அடிப்படையிலும், ரூம் அடிப்படையிலும் பல நிறுவனங்கள் ஒரே இடத்தில் வாடகைக்கு எடுத்து பணியாற்ற கூடிய இடம்.
இதேபோல் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து, மக்கள் மத்தியில் இடம் பிடித்த பிராண்டுகள் சொந்தமாக கடைகளை திறப்பதில் பல தயக்கம் இருக்கும். வாடகை, இன்டீரியர், சரியான ஏரியா இப்படி பல விஷயங்கள் தடையாக இருக்கும். இந்த அனைத்து தடைகளையும் உடைக்கும் ஒரு விஷயம் தான் co-retail space.
'புதிய யுகத்தின் ரீடைல் கடை அனுபவம்' என்று அடையாளப்படுத்தப்படும் பிராட்வே, ஒரு கூட்டு சில்லறை விற்பனை தளமாகும். இது புதிய தலைமுறை பிராண்டுகளை ரீடைல் சந்தையில் அடியெடுத்து வைக்க உதவுகிறது. உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி, அழகு சாதனப் பொருட்கள், பர்சனல்கேர், லைப்ஸ்டைல், ஃபேஷன் மற்றும் உணவு & பானம் ஆகிய துறைகளில் இருக்கும் பிராண்டுகளை காட்சிப்படுத்த வாய்ப்புகளை வழங்குகிறது.
25,000-35,000 சதுர அடி பரப்பளவில் ஒவ்வொரு பிராட்வே கடையிலும் பிராண்டுகள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தப்படும் இடம், ஒரு கிரியேட்டரின் ஸ்டுடியோ, சாபிள் கொடுக்கும் இடம், ஆலோசனை அறைகள், ட்ரை சலூன், 'த மேக்கர்ஸ் லாப்'ஆகியவை இருக்கும்.
இந்தியாவில் கன்டென்ட் துறையில் இருந்து பல பிராண்டுகள் தற்போது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது, இந்த பிராண்டுகளை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு இந்த முயற்சி கொண்டுள்ளதாக தெரிகிறது.
இத்தகைய co-retail space பல பிராண்டுகளுக்கு முக்கிய இடத்தை ரீடைல் சந்தையில் பெற வாய்ப்பாக அமையலாம்.


Click it and Unblock the Notifications