முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யக் கிஷோர் பியானியின் பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்ற ஒப்பந்த செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு அமேசான் தடை பெற்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் பியூச்சர் குரூப் கிஷோர் பியானி புதிய வர்த்தகத்திற்குள் நுழைய முடிவு செய்துள்ளார்.
முகேஷ் அம்பானி - கிஷோர் பியானி டீல்
முகேஷ் அம்பானி கடனில் சிக்கியிருக்கும் பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றும் போது பல்வேறு கண்டிஷன்கள் உடன் தான் கைப்பற்றினார். குறிப்பாகக் கிஷோர் பியானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ரீடைல் வர்த்தகத் துறையில் குறிப்பிட்ட காலத்திற்கு நுழையக் கூடாது என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
நொறுக்குத் தீனி வர்த்தகம்
இந்நிலையில் கிஷோர் பியானி தற்போது பியூச்சர் குரூப்-ன் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான பியூச்சர் கன்ஸ்யூமர் நிறுவனத்தின் வாயிலாக ஆரோக்கியமான நொறுக்குத் தீனி வர்த்தகத்தில் நுழையத் திட்டமிட்டு உள்ளார்.
Terra Chips வர்த்தகம்
2017ல் பியூச்சர் குரூப் உடனான கூட்டணியில் இந்தியாவிற்கு வந்த அமெரிக்க உணவு நிறுவனமான Hain Celestial நிறுவனத்தின் குலட்டின் இல்லாத காய்கறி சிப்ஸ் வகையான Terra Chips-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த வருடமே அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்ட நிலையில் கொரோனா தொற்று, லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாகத் தடைப்பெற்றது.
Terra Chips விலை
தற்போது 150 கிராம் Terra Chips 400 ரூபாய் விலையில் ப்ரீமியம் நொறுக்குத் தீனி பிரிவின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் சிப்ஸ் வகையை Hain Celestial கூட்டணி நிறுவனமான பியூச்சர் கன்ஸ்யூமர் நிறுவனம் தூம்கூர் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.
விலை குறைப்பு
மார்ச் 8ஆம் தேதி முதல் சந்தை விற்பனைக்கு வந்துள்ள Terra Chips இதன் விலையை 150 சதவீதம் குறைக்கப்பட்டு 60 கிராம் சிப்ஸ் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இந்த டெரா சிப்ஸ் சுமார் 3 சுவைகளில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications