மும்பை ஹாஜி அலி பகுதியில் அமைந்துள்ள சொபோ சென்ட்ரல் மாலின் உரிமையாளரான பன்சி மால் மேனேஜ்மெண்ட் கோ நிறுவனத்தின் ரூ.571 கோடி கடனை வசூலிக்கும் விதமான, இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் ஒன்றிணைந்து கனரா வங்கி தலைமையிலான கூட்டம் ஒன் டைம் செட்டில்மென்ட் மூலம் தீர்வு காண முடிவு செய்தது.
இந்த நிலையில் SOBO Central Mall-ஐ கைப்பற்றப் பல நிறுவனங்கள் போட்டிப்போட்ட நிலையில், ரன்வால் குழுமம் ஏலத்தில் வெற்றிபெற்றது. ஆனால் இந்த ஏல தொகையைக் காட்டிலும் அதிகப்படியான தொகையை அளிக்கத் தயார் என பியூச்சர் குரூப் கிஷோர் பியானி அறிவித்துள்ளார்.

கனரா வங்கி தலைமையில் நடந்த SOBO Central Mall-க்கான ஏல செயல்முறையில் ரன்வால் குழுமத்திடமிருந்து ரூ.475 கோடி மதிப்பிலான ஏல விண்ணப்பம் ஒப்புதல் அளித்த சில நாட்களிலேயே கிஷோர் பியானி ரூ.476 கோடி மதிப்பிலான ஏல தொகையை அளிக்க தயார் என அறிவித்தார்.
சமீபத்தில் இந்தியாவில் ஒரு புதிய டிரெண்ட் உருவாகியுள்ளது, திவாலான சொத்துக்களை ஏலம் விடும் போதும் வெற்றிபெறுவோர் அறிவித்துள்ள தொகையை விட அதிக தொகையை ஏலம் முடிந்த பின்பு பிற நிறுவனங்கள் அறிவிப்பது வழக்கமாகியுள்ளது. ஏலத்தை நடத்துபவர்களும் கூடுதல் தொகை கிடைத்தால் நன்மை என்ற நிலையில் இத்தகைய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.
இத்தகைய செயல் முறையை முதலில் அதானி குழுமம் தான் துவங்கி வைத்தது, DHFL திவாலான நிலையில் இதை பிராமல் கைப்பற்ற முயற்சி செய்த போது அதானி குழுமம் கூடுதல் தொகையை அறிவித்தது. இதனால் மீண்டும் ஏலத்தில் அனைவரும் பங்கு பெற்று வாய்ப்பு அளிக்கப்பட்டு கடைசியில் பிராமல் குரூப் கைப்பற்றியது.
இந்த மாத தொடக்கத்தில், கனரா வங்கி தலைமையிலான கடன் வழங்கியவர்களின் குழு Sarfaesi நடவடிக்கைகளைத் தொடங்கி, இந்த மால்-ஐ கையகப்படுத்துவதற்காக ரூ.475 கோடி ஏலம் விண்ணப்பத்தை ரன்வால் குழுமத்திடமிருந்து பெற்றனர். ஆனால் கடந்த வாரம், தீர்ப்பாயத்தை அணுகி கிஷோர் பியானி கூடுதலாக 1 கோடி கொடுப்பதாக 476 கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்தார்.
இதேவேளையில் SOBO Central Mall-க்காக கடந்த வாரம் ரன்வால் குழுவிடமிருந்து ஏலத் தொகையில் 10% அதாவது ரூ.47.5 கோடி முன்பணத்தைக் கடன வழங்குபவர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது கிஷோர் பியானி மனுவால் இந்த மால்-க்கான கடனில் தீர்வு காணுவது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
பியூச்சர் குரூப் கிஷோர் பியானி தனது நிறுவனத்தின் பெயரில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மாட்டிக்கொண்டு திவால் நடவடிக்கைகளை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், தற்போது மும்பையில் SOBO Central Mall-ஐ வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications