ஸ்டார்ட் அப் ஐடியா இருக்கு? ஆனா பணம் இல்லையா? கவலை வேண்டாம்.. MUDHAL VC உங்களுக்கு கை கொடுக்கும்..!

சென்னை: தற்போது பல்வேறு இளைஞர்களுக்கும் மக்களின் நவீன தேவைகளுக்கு ஏற்ப புதிதாக தொழில்களை தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. இப்படி ஸ்டார்ட் அப் ஐடியாக்களோடு இருக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால் அதற்கு முதலீடு செய்ய தேவையான பணம் இல்லாததால் அவர்களால் தொழில் தொடங்க முடியாமல் போகிறது.

இப்படி சிறந்த ஐடியாவுடன் இருக்கும் ஆனால் போதிய நிதி இல்லாத நபர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள ஒரு திட்டம் தான் முதல் விசி (MUDHAL VC).

 ஸ்டார்ட் அப் ஐடியா இருக்கு? ஆனா பணம் இல்லையா? கவலை வேண்டாம்.. MUDHAL VC உங்களுக்கு கை கொடுக்கும்..!

கிஸ் ஃப்லோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுரேஷ் சம்பந்தம் ஐடியா நிலையில் உள்ள ஸ்டார்ட் அப்களுக்கு நிதி உதவி அளித்து ஊக்குவிக்கும் வகையில் முதல் விசி எனும் திட்டத்தை தொடங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை மையமாகக் கொண்டு தொடங்கப்படும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதற்காகவே இப்படி ஒரு திட்டத்தை தொடங்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தங்களிடம் சிறந்த ஸ்டார்ட் டப் ஐடியா இருக்கிறது என கருத்துபவர்கள் முதல் விசி-ஐ தொடர்பு கொண்டு ஐடியாக்களை தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவதற்கு தேவையான நிதி உதவியை வழங்குவதோடு மட்டுமில்லாமல் ஒரு நிறுவனத்தை எப்படி தொடங்க வேண்டும் அதற்கு எப்படி எல்லாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் நெட்வொர்க்கிங் எப்படி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளது.

ஸ்டார்ட் அப்களின் பள்ளியாக விளங்கும் அமெரிக்காவின் ஒய்காம்பினேட்டர் போல தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்படும் என சுரேஷ் சம்பந்தம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதலில் பயிற்சி அளித்து பின்னர் முதலீடு அளிக்கும் அணுகுமுறை அடிப்படையில் முதல் விசி செயல்படும் என தெரிவித்துள்ள சுரேஷ் சம்பந்தம் முதலீட்டை பயன்படுத்துவதற்கு முன்பாக தொழில் முனைவோர் அதற்கு தயாராக இருப்பதை உறுதி செய்வதே தங்களின் முதன்மையான நோக்கம் எனக் கூறியுள்ளார்.

கடந்த 24 மாதங்களில் தங்களுடைய ஐடியா பட்டறை மூலம் 15 ஸ்டார்ட் அப்களை தேர்வு செய்து முதல் விசி ஏற்கனவே அதில் முதலீடு செய்துள்ளது எனக் கூறியுள்ளார் .அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் 125 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமே முதல் விசி முதலீடு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே முதல் விசி திட்டத்தின் மூலம் Amura, Bversity, BookingBee, MeenSatti, Mushroom MaMa, Social Gallery உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு பெற்றுள்ளன.

இந்த திட்டம் தமிழ்நாட்டை ட்ரில்லியன்ட் டாலர் பொருளாதரமாக மாற்றும் அரசின் முயற்சிக்கு ஒரு சிறந்த பங்களிப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார். புதிய ஸ்டார்ட் அப்கள் மட்டுமின்றி ஏற்கனவே தொடங்கி வெற்றி பெற முடியாமல் தவிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் இதில் ஆலோசனைகள் வழங்கப்படும் என சுரேஷ் சம்பந்தம் கூறியுள்ளார்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+