சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு BMW கார் பரிசு.. சென்னையிலுள்ள ஐடி நிறுவனம் அதிரடி..!

சென்னையில் செயல்படும் ஐடி நிறுவனம் kissflow, 10 ஆண்டுகளை நிறைவு செய்வதை கொண்டாடும் வகையில், சிறப்பாக பணியாற்றிய 5 ஊழியர்களுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான பிஎம்டபள்யூ காரினை பரிசாக அளித்துள்ளது.

கிஸ்ஃப்ளோவின் இந்த பரிசானது மழை, வெயில், வெள்ளம் என பாரபட்சம் இல்லாமல் நிறுவனத்துடன் 10 ஆண்டுகள் இணைந்து பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிறுவனம் நெருக்கடியான நிலையில் இருந்த போதும் கூட, ஊழியர்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியோருக்கு ஊக்குவிக்கும் விதமாக இந்த சிறிய பரிசினை கொடுத்துள்ளதார் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுரேஷ் சம்பந்தம் தெரிவித்துள்ளார்.

யார் இந்த சுரேஷ்

யார் இந்த சுரேஷ்

இந்தியாவின் முன்னணி மென் பொருள் நிறுவனங்களில் ஒன்றாகும். 160 நாடுகளில் சேவை செய்து வரும் இந்த நிறுவனம், 10,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர்யும் தலைமை செயல் அதிகாரியுமான சுரேஷ் சம்பந்தம், புதுச்சேரியில் பிறந்திருந்தாலும், வளர்ந்தது கடலூர் ஆகும். இவர் ஒரு முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆவார்.

ஒர்க் பிரம் ஹோமுக்கு ஆதரவு

ஒர்க் பிரம் ஹோமுக்கு ஆதரவு

ஒர்க் பிரம் ஹோம் முறையினை பெரிதும் ஆதரிக்கும் சுரேஷ், கிராமப்புறங்களில் உள்ள வேலை செய்யும்ப்பொது, அவர்களின் பொருளாதாரம் மேம்படும். அவர்கள் மட்டும் அந்த கிராமத்தின் பொருளாதாரமே மேம்படும் என்றும், அதன் மூலம் பள்ளிகளிம் வளர்ச்சி காணும் என்றும் கூறியவர்.

தனது குடும்ப உறுப்பினர்கள்

தனது குடும்ப உறுப்பினர்கள்

எழுத்தில் மிக ஆர்வம் கொண்ட சுரேஷ், சில தொடர்களையும் எழுதியவர். தனது நிறுவனத்தில் உள்ள ஊழியர்களை வெறும் ஊழியர்களாக மட்டும் கருதாமல், அவர்களை தனது குடும்ப உறுப்பினர்களாக கருதும் சுரேஷ், தனது ஊழியர்களுக்கு என்று கொடுத்துள்ள அன்பு பரிசு தான் இந்த கார்.

 வேலையை உருவாக்க வேண்டும்.

வேலையை உருவாக்க வேண்டும்.

டிரீம் தமிழ் நாடு என்ற குழுவினை நிறுவியுள்ள சுரேஷ், தமிழ் நாட்டினை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது நோக்கம் என கூறியுள்ளார். மாணவர்களையும், வல்லுனர்களையும் வேலை தேடுபவர்களை விட, வேலைகளை உருவாக்குபவர்களாக ஊக்குவித்தும் வருபவர். மொத்தத்தில் தமிழக இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி என்றும் கூட கூறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+