மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் கே. எல். ராகுல் மும்பையில் பிரபலங்கள் வசிக்கும் பாந்த்ரா பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி இருக்கிறார். ராகுலும் அவரது மனைவி அதியா சுனில் செட்டியும் இணைந்து இந்த வீட்டினை வாங்கியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் ஒரு நட்சத்திரமாக கே.எல்.ராகுல் இருக்கிறார். இவரது மனைவி அதியா , பிரபல பாலிவுட் நடிகர் சுனில் செட்டியின் மகளாவார். தற்போது ராகுல் மற்றும் அவரது மனைவி அதியா ஆகிய இருவரும் மும்பை பல்லி ஹில் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பினை வாங்கி இருக்கின்றனர்.

புதிய அடுக்குமாடி குடியிருப்பின் அளவு 3350 சதுர அடி என தெரியவந்துள்ளது. பல்லி ஹில் பகுதியில் உள்ள சாந்து பேலஸ் பில்டிங்கில் இரண்டாவது தளத்தில் இவர்கள் வாங்கி இருக்க கூடிய குடியிருப்பு அமைந்துள்ளது.
மொத்தம் 18 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பாக இது இருக்கிறது என ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த 20 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புக்காக ராகுல் மற்றும் அவரது மனைவி அரசுக்கு பத்திரப்பதிவுக்காக மட்டும் 1.20 கோடி ரூபாயை செலுத்தியுள்ளனர். மேலும் பதிவு கட்டணமாக 30,000 ரூபாயை செலுத்தியுள்ளனர் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அடுக்குமாடி குடியிருப்பினை பொருத்தவரை நான்கு கார் பார்க்கிங் வசதிகளை கொண்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதி இந்த பரிவர்த்தனை நடைபெற்றதாக தெரிகிறது. அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வென்றது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ வீரர்களுக்கு 125 கோடி ரூபாய் பரிசு தொகையை பகிர்ந்து அளிப்பதாக தெரிவித்தது. இதன் நினைவாக கே.எல்.ராகுல் இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் உயர்ந்த சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களும் வசிக்கக்கூடிய ஒரு தான் பாந்த்ரா. இங்கே ஒரு சதுர அடி விலை 1 லட்சம் ரூபாய் ஆகும். நடிகர்கள் அமீர்கான் , சல்மான்கான், ஷாருக்கான், ஜான்விகபூர் உள்ளிட்ட பலரும் இந்த பகுதியில் தங்களது குடியிருப்புகளை வைத்திருக்கின்றனர்.
கே.எல்.ராகுலின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 99 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர் பெங்களூரு மற்றும் கோவா ஆகிய நகரங்களிலும் சொந்தமாக குடியிருப்புகளை வாங்கி வைத்திருக்கிறார் அது மட்டும் இன்றி ஆடம்பர கார்களை வாங்குவதிலும் இவருக்கு விருப்பம் அதிகம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications