இந்தியாவில் திருமண வரன் தேடும் (Matrimonial) தளங்கள் எப்போதுமே பணப்புழக்கம் அதிகம் உள்ள ஒரு சந்தையாகும். இந்த சந்தையில், புதிய தொழில் நுட்பத்துடன் அடியெடுத்து வைத்திருக்கும் Knot.dating என்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜஸ்வீர் சிங் மற்றும் அபிஷேக் அஸ்தானா ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த செயலி, அதன் தனித்துவமான விதிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திறனுக்காக தற்போது பேசுபொருளாகியுள்ளது. மேலும், சந்தையில் ஏராளமான பணத்தைச் செலவழிக்கும் பெரும்பாலான கன்ஸ்யூமர் இன்டர்நெட் ஸ்டார்ட்அப்களுக்கு மத்தியில், வெறும் 6 மாதங்களில் செயல்பாட்டு லாபத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

Knot.dating செயல்படும் விதம் : இந்த செயலி, இந்திய திருமணச் சந்தையில் நிலவும் ஒரு இடைவெளியைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு புதுமையான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் பதிவு செய்ய விரும்பும் ஆண்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கும் தகுதி கட்டாயமாகும். பெண்களுக்கு எந்த ஒரு சம்பள வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்தச் செயலி, பணம் செலுத்திப் பெறும் பிரீமியம் சந்தா முறையினைக் கொண்டிருந்தாலும், வாடிக்கையாளர்களைப் பெறுவதிலும், தக்கவைத்துக் கொள்வதிலும் வெற்றிகண்டு 6 மாதங்களில் லாபம் ஈட்டியுள்ளது.
நிறுவனத்தின் வெற்றி மற்றும் இலக்கு :
இந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜஸ்வீர் சிங் பேசுகையில், "இந்தியர்கள் அதிக மதிப்புள்ள சந்தாக்களுக்குப் பணம் செலுத்த மாட்டார்கள் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், நாங்கள் அதை முறியடித்துள்ளோம். இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட 6 மாதங்களுக்குள்ளேயே, நாங்கள் நல்ல லாபத்தை அடைந்துள்ளோம்" என்று பெருமிதம் தெரிவித்தார்.
Knot.dating என்பது மற்றொரு மேட்ரிமோனியல் செயலி அல்ல. இது இந்தியாவின் திருமணத் தேடல் எதிர்காலத்திற்கான ஒரு கலாச்சார பிராண்டாக மாறி வருகிறது என்றும் அவர் கூறினார். மேலும், அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லாத எவரையும் நாங்கள் தீவிரமாக தவிர்க்கிறோம். எங்கள் சந்தா மிக அதிக மதிப்புடையது. நீங்கள் தீவிரமாக இல்லாவிட்டால், உங்கள் நேரத்தையும் மற்றவர்களின் நேரத்தையும் வீணடிப்பீர்கள்" என்று எச்சரித்துள்ளார்.
நீங்கள் தீவிரமாக இல்லை என்றால், உங்கள் பணம் எங்களுக்குத் தேவையில்லை. இந்த செயலியின் மூலம் பொருத்தம், அறிமுக அழைப்பு, சந்திப்பு, குடும்பச் சந்திப்பு இருக்கும். இந்தியாவில் ஒற்றைத் தனிநபர்கள் சரியான துணையைத் தேட பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். இப்போது தங்கள் செயலி அனுபவத்தை விரிவுபடுத்தவும், பிரீமியம் உறுப்பினர்களை அதிகரிக்கவும், இந்தியாவின் திருமணச் கலாச்சாரத்தின் எதிர்காலத்தைத் தொடர்ந்து வடிவமைக்கவும் இலக்கு வைத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications