சிகரெட் மற்றும் மதுபானங்கள் ஏன் தயாரிப்பு விலையைக் காட்டிலும் மிக அதிகமாக விற்கப்படுகிறது என்று தெரியுமா? காரணம் அதன் விலையின் பெரும்பகுதியானது மற்ற பொருட்களை விட அதிகளவில் வரி விதிப்பாகும், இத்தகைய வரி தான் sin tax. மக்களுக்கு தீங்கிழைக்கும் பொருட்களை பயன்படுத்துவதை தடுப்பதற்காகவே, இத்தகைய பொருட்கள் மீது sin tax என்படும் பாவ வரி சுமத்தப்படுகிறது.
சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு இந்தியாவில் அதிகளவு வரி விதிக்கப்படுகிறது. தற்போதைய ஜிஎஸ்டி அமைப்பின்படி பான் மசாலா, கார்பனேடெட் பானங்கள், புகையிலை பொருட்களுக்கு அதிகளவில் பாவ வரி சுமத்தப்படுகிறது.

இந்தியாவில் 270 மில்லியன் மக்கள் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஏதாவது ஒரு வகையில் புகையிலையை பயன்படுத்துகின்றனர். நாள்பட்ட நோய்களுக்கு புகையிலை தான் காரணமாக விளங்குகிறது. இந்தியாவில் புகையிலை காரணமாக ஆண்டுதோறும் 1.35 மில்லியன் மரணங்கள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
புகையிலை பொருட்கள் ஜிஎஸ்டியின் அதிகபட்ச வரம்பான 28 சதவீதத்தில் அடங்குகிறது, இதை தாண்டி அதிகளவு செஸ் வசூலிக்கப்படுகிறது. இந்த செஸ் மூலம் மாநிலங்கள் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் ஏற்படும் இழப்பை சரி செய்யப்படுகிறது.
முறைப்படுத்தா புகையிலை மீது 65 சதவீத செஸ் வசூலிக்கப்படுகிறது, இதை தொடர்ந்து நறுமணமூட்டப்பட்ட ஜர்தாவுக்கு 160 சதவீதம் செஸ் வசூலிக்கப்படுகிறது. குட்கா அடங்கியுள்ள பான் மசாலாவுக்கு 204 சதவீத செஸ் வசூலிக்கப்படுகிறது.
1000 சிகரெட்களுக்கு தற்போது 5 சதவீதம் அதிகமான ரூ.4170 வரை வசூலிக்கப்படுகிறது. ஆக சிகரெட்டுக்கு மொத்தம் 57 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பீடிகளுக்கு 22 சதவீதம். புகையில்லாத புகையிலைக்கு 63.8 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
இருப்பினும், உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அனைத்து புகையிலை பொருட்களின் சில்லறை விலையில் குறைந்தது 75% வரிச்சுமையை விட இது இன்னும் மிகக் குறைவு.
அக்டோபரில், பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில் அனைத்து புகையிலை பொருட்களையும் உள்ளடக்கிய விரிவான வரிக் கொள்கை முன்மொழிவைத் தயாரிக்க ஒன்பது பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. ஜிஎஸ்டி வரம்புக்கு வெளியே உள்ள மதுவுக்கு மாநிலங்கள் தனித்தனியாக வரி விதிக்கின்றன. மது மீதான அதிக வரி மாநிலங்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாகவும் உள்ளது.
2019-20 ஆம் ஆண்டில், அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மதுபானம் மீதான மாநில கலால் வரியில் இருந்து ரூ.1,75,501.42 கோடியை பட்ஜெட் செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை காட்டுகிறது. ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்துக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பான ரூ.2.5 லட்சத்தை கணக்கில் கொள்ளாமல் 30% பிளாட் விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications