சென்னை: ஒரு சமீபத்திய சர்வே ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் கேஷ்பேக் மற்றும் ரிவார்ட் எனக் கூறி மக்களை ஈர்க்கிறது. அதனை நம்பி வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்தால் எந்தவித கேஷ்பேக்கும் அவர்களுக்கு கிடைப்பதில்லை எனக் கூறியுள்ளது.
இன்றைய இன்டர்நெட் உலகில் அனைவரும் ஆன்லைன் பேமெண்ட் செய்வதையே விரும்புகிறோம். கடைகளுக்கு சென்று ஒரு பொருளை வாங்குவதற்கு பதிலாக வீட்டிலிருந்து ஆன்லைனில் ஷாப்பிங் செய்து வருகிறோம். அப்படி நாம் ஷாப்பிங் செய்யும்போது பல ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் நமக்கு கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி ஆகியவற்றை வழங்கும் எனக் கூறுகிறது. நாம் ஆன்லைன் பேமெண்ட் ஆப்களில் பரிவர்த்தனை செய்யும்போது, சில ஸ்க்ராட்ச் கார்ட்களை நமக்கு வழங்குகிறது. இன்னும் சில நேரங்களில் ஆன்லைன் பேமெண்ட் பிளாட்பார்ம்களில் நீங்கள் செய்யும் அடுத்த ரீசார்ஜ்ஜிற்கு அல்லது கட்டணத்திற்கோ, உங்களுக்கு குறிப்பிட்ட ரூபாய் தருவதாகவும் மெசேஜ்கள் வருவதை நாம் பார்ப்போம். சில கூப்பன்களில் பல்வேறு நிறுவனங்களின் அழகு சாதன பொருட்கள், கண்ணாடிகள் போன்ற பொருட்களின் கூப்பன்கள் இருக்கும். மேலும், அவற்றை நாம் வாங்கும்போது நமக்கு குறிப்பிட்ட சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்று எழுதி இருக்கும். சில கூப்பன்களில் 50 சதவீதம் வரை கேஷ் பேக் வழங்கப்படும் என்ற செய்திகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். நாமும் அதை நம்பி கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி சலுகைகளுக்கு கவரப்பட்டு சில பொருட்களை வாங்குகிறோம். ஆனால் நாம் வாங்கிய பிறகு எந்த விதமான கேஷ்பேக்கும் நமக்கு கிடைப்பதில்லை என ஒரு சர்வே கூறுகிறது.

சமீபத்திய கணக்கெடுப்பில் பல வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பேமென்ட் பிளாட்ஃபார்ம்களில் தரப்படும் கேஷ்பேக் மற்றும் ரிவார்ட்களுக்கு வசீகரிக்கப்படுகிறார்கள். இதனால் பல வாடிக்கையாளர்கள் தங்களுக்கும் கேஷ்பேக் கிடைக்க வேண்டும் என்று எண்ணி, கேஷ்பேக்கிற்காக, பொருள்களை ஷாப்பிங் செய்கின்றனர். ஆனால், அதன் பிறகு அந்த பேமெண்ட் தளங்களில் கூறப்பட்டுள்ளது போல், எந்தவிதமான கேஷ் பேக் அல்லது சலுகைகளும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், 13 வகையான, இது போன்ற தவறான விளம்பரங்களை கண்டறிந்து உள்ளது, இதில் நுகர்வோர் உரிமைகளை மீறும் நியாயமற்ற நடைமுறைகள் மற்றும் கேஷ்பேக் போன்றவைகள் அடங்கும்.
லோக்கல் சர்க்கில்களின் கணக்கெடுப்பின்படி 45,000 வாடிக்கையாளர்கள், அதாவது சுமார் 52 சதவீதம் பேர், இந்த பேமெண்ட் தளங்களில் மறைமுக கட்டணங்கள் போன்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். அதில் 67 சதவீத வாடிக்கையாளர்கள் சப்ஸ்கிரிப்ஷன் பேமெண்ட் செலுத்தும்போது பிரச்சனைகளை சந்திக்கின்றனர். மேலும், இந்த பேமெண்ட் பிளாட்ஃபார்ம்கள், வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ட்ரா பேமெண்ட் செய்யும் போது கேஷ்பேக் தருவதாகக் கூறி பின்பு அவர்களுக்கு எந்தவிதமான கேஷ் பேக்கும் தருவதில்லை.
இந்திய அரசாங்கம் டிசம்பர் 2023 இல் இதுபோன்ற நடைமுறைகள் சட்டவிரோதமானது, மேலும் இதுபோன்ற நடைமுறை கண்டறியப்பட்டால் அபராதமும் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), இது போன்ற ஏமாற்று விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கையாள்வதற்கு முயற்சித்தால், ஆன்லைன் பேமெண்ட் தளங்களுக்கு எதிராக ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளது.
எனவே இது போன்ற ஆன்லைன் பிளாட்பார்ம்களில், நீங்கள் பொருட்களை வாங்கும் போது அது உண்மையாகவே உங்களுக்கு தேவைப்படுகிறதா? என்பதை புரிந்து ஷாப்பிங் செய்யவும். மேலும் அவர்கள் தரும் கேஷ்பேக்கிற்கோ அல்லது சலுகைகளுக்கோ ஆசைப்பட்டு எந்த பொருட்களையும் வாங்குவது அவர்களுக்கே நன்மை தரும் என்பதை புரிந்து நடந்து கொள்வோம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications