சென்னை: 1976 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு காப்பீட்டுத் திட்டமே பணியாளர்கள் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) ஆகும். இந்தத் திட்டமானது தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்கிடும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. EDLI திட்டமானது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்தத் திட்டத்தில் உறுப்பினராக உள்ள பணியாளருக்கு ஆயுள் கால காப்பீட்டுத் தொகையை வழங்கி வருகிறது.
மேலும் இந்த திட்டத்தில் உறுப்பினராக உள்ள நபர் சேவையில் இருக்கும் போது எதிர்பாராத விதமாக இறந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு இந்த திட்டம் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையானது வழங்கப்படுகிறது.

எந்த வயதினராக இருந்தாலும் சரி, இந்த EDLI திட்டம் மூலம் இறந்தவரின் குடும்பத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் நிதி உதவி அளிக்கப்படுகிறது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம் 1952 (EPF Act) கீழ் நடைமுறையில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்தத் திட்டம் பொதுவானது.
EDLI-இன் கீழ், EPF உறுப்பினர் பணியில் இருக்கும் போதே இறந்து விட்டால், ஊழியரின் சட்டப்பூர்வ வாரிசுகள் அதிகபட்சமாக ரூ. 7 லட்சம் வரை உறுதிசெய்யப்பட்ட நிதி உதவி பெற முடியும். ஊழியர் இறப்பதற்கு முன் கடந்த 12 மாதங்களில் தனது வேலையில் இருந்து வேறு வேலைக்கு மாறினாலும், இந்த திட்டத்தின் சட்ட திட்டங்கள் அனைத்தும் அவருக்கும் பொருந்தும். பெற்றுக் கொள்ளப்படும் காப்பீட்டுத் தொகையானது பணியாளரின் சட்டப்பூர்வ வாரிசு யாரோ, அவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
மாற்றாக அவர்கள் அதிக ஊதியம் பெறும் காப்பீட்டுத் தொகை திட்டத்தைப் பெற விருப்பம் தெரிவித்தால், இந்த திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறித்து எந்தவித நிபந்தனைகளும் இந்த திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பணியாளர்கள் தொடர்ந்து ஒரு வருடம் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தாலும், EPF இன் ஆக்டிவ் உறுப்பினராக இருந்தாலும் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியும்.
தொழிலாளி மற்றும் முதலாளி ஆகிய இருவரும் பங்களிக்கும் வகையில் உள்ள EPF திட்டத்தைப் போலல்லாமல், இந்த EDLI திட்டத்தில், முதலாளி மட்டுமே பங்களிக்க முடியும். இது அடிப்படை மற்றும் அகவிலைப்படியில் (DA) குறைந்தபட்சம் 0.5 சதவீதமாக இருக்கும்.
ஒரு ஊழியர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் ஒரு வருடத்திற்கு மேல் பணிபுரிந்திருந்தால், சென்ற 12 மாத சம்பளத்தின் சராசரியை விட 35 மடங்கு (அதிகபட்சம் ரூ. 15,000) மற்றும் முந்தைய 12 மாதங்களில் மாத சராசரி நிலுவைத் தொகையில் 50 சதவீதம் செலுத்தப்படும் (அதிகபட்சம் ரூ. 1,75,000). இதன் அடிப்படையில் அதிகபட்ச தொகையாக 7 லட்சம் ரூபாய் வரை சம்பந்தப்பட்ட நபர்கள் காப்பீட்டு தொகையினை பெறமுடியும்.
இந்த செயல்முறையைப் பொறுத்தவரை, காப்பீட்டு தொகையை க்ளைம் செய்ய நாமினி EDLI, PF மற்றும் இறந்த பணியாளரின் ஓய்வூதியப் பலன்களுக்கு ஒரு கூட்டுப் படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். நாமினியாக உள்ளவர் இறப்பு அல்லது வாரிசு சான்றிதழ் மற்றும் பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இதனைப் பின்பற்றி காப்பீட்டு தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications