சென்னை: வங்கிகளில் பர்சனல் லோன் பெறுவதற்கு நீங்கள் எந்த விதமான நகைகள் மற்றும் நிலங்களை அடமானம் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வங்கி கணக்கில் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தாலே போதுமானது. கிரெடிட் ஸ்கோர் என்பது மூன்று எழுத்து எண் ஆகும். உங்களது அனைத்து பண பரிவர்த்தனைகளையும் இந்த கிரெடிட் ஸ்கோரின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் வங்கிகளில் வாங்கிய கடன் முதல் நீங்கள் அவற்றை திருப்பி செலுத்திய தேதி வரை அனைத்தையும் இந்த கிரெடிட் ஸ்கோரை வைத்தே வங்கி நிறுவனம் கூறிவிடும். இந்த கிரெடிட் ஸ்கோரானது 750 க்கு மேல் இருந்தால் உங்களுக்கு வங்கிகள் கடன் தருவது குறித்து பரிசீலிக்கும்.
மேலும் உங்களுக்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் நீங்கள் எளிதாக பர்சனல் லோன் பெற முடியும். அவசர காலங்களில் மட்டும் பர்சனல் லோன் பெறுவது நல்லது. ஏனென்றால் பர்சனல் லோன் பொதுவாகவே அதிக வட்டியை கொண்டிருக்கும். இதனைப் பெற ஆதார் கார்டு ஒன்றே போதுமானது. மேலும் வங்கிகள் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு கால் செய்து உங்களை அழைத்து பர்சனல் லோன் கொடுக்கும் வங்கிகளும் உண்டு. பர்சனல் லோன் வாங்குவது என்பது நமக்கு என்னவோ எளிதான காரியம் தான். ஆனால் அதனை திருப்பி செலுத்தும் போது தான், நாம் பெரிய சிக்கலை சந்திப்போம். அவற்றை நீங்கள் சரியாக செலுத்தாத போது உங்கள் கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படும்.

இந்தப் பதிவில் எந்தெந்த வங்கிகள், எவ்வளவு சதவீத வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் வழங்குகிறது என்பது குறித்து பார்ப்போம்.
பேங்க் ஆப் இந்தியா, சிட்டி பேங்க், ஆக்சிஸ் பேங்க், ஹச்டிஎப்சி பேங்க், ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் போன்ற வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு 10.75 சதவீத வட்டியுடன் பர்சனல் லோன் வழங்கி வருகிறது. மேலும் இதனை செலுத்துவதற்கான கால அவகாசம் நான்கு வருடங்கள். நீங்கள் ரூ.1 லட்ச ரூபாய் பர்சனல் லோன் பெறும் தொகைக்கு ரூ. 2,572 ரூபாய் EMI வசூலிக்கப்படும்.
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10.8 சதவீத வட்டியில் பர்சனல் லோன் வழங்கி வருகிறது. பெரும்பாலும் வங்கிகள் பர்சனல் லோன் திரும்ப செலுத்த நான்கு ஆண்டுகள் நிர்ணயிக்கிறது. அதன்படி, இந்த வங்கியிலும் நாம் ரூ. 1 லட்சம் பர்சனல் லோன் வாங்கி இருந்தால் ரூ. 2,575 ரூபாய் செலுத்த வேண்டும்.
கோடக் மகேந்திரா பேங்க் மற்றும் எஸ் பேங்க் ஆகிய இரண்டும் பத்து புள்ளி 99 சதவீத வட்டி விகிதத்துடன் பர்சனல் லோன் வழங்கி வருகிறது. இதனை திருப்பி செலுத்தும் கால அவகாசம், அதே நான்கு ஆண்டுகள். மேலும் ரூ. 1 லட்சம் பர்சனல் லோன் பெற்றால் மாதம்
ரூ. 2,584 ரூபாய் EMI செலுத்த வேண்டும்.
அரசு வங்கியான பேங்க் ஆஃப் பரோடா 11.4 சதவீத வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் வழங்கி வருகிறது. நீங்கள் இந்த வங்கியில் ரூ. 1 லட்சம் பர்சனல் லோன் பெற்றால் ரூ. 2,604 EMI செலுத்த வேண்டும். நான்கு ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
பஞ்சாப் நேஷனல் பேங்க் 12.4 சதவீத வட்டி விகிதத்துடன் பர்சனல் லோன் வழங்கி வருகிறது. இந்த வங்கியில் ரூ.1 லட்சம் ரூபாய் பர்சனல் லோன் பெற்றால் மாத தவணையாக ரூ. 2,653 செலுத்த வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications