பல்வேறு விதமான கலாச்சாரங்கள் மற்றும் வளங்களை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு மற்றும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிப்பதற்கான சிறந்த வழி என்றால் ரயிலில் பயணிப்பது தான். இந்திய இரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே அமைப்பாகும், சுமார் 7,000-திர்க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ஒரு நாளில் 23 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இது ஒரு பிரம்மாண்டமான அமைப்பாக இருந்தாலும், இதில் பயணிகள் பின்பற்ற வேண்டிய ஒரு சில விதிகள் உள்ளன.
ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள், ஒரு சில ரயில்வே துறையின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றவில்லை என்றால், ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலை கூட ஏற்படலாம். எனவே எப்பொழுதும் ரயிலில் பயணிப்பவர்கள் ரயில்வே துறையின் விதிமுறைகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பயணிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான இந்திய ரயில்வே விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

டிக்கெட் இல்லாமல் பயணிப்பது: டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்து யாரேனும் பிடிப்பட்டால், அவருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது அந்த டிக்கெட்டின் விலையுடன் சேர்த்து குறைந்தபட்சமாக ரூ. 250 முதல் அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.
இ-டிக்கெட் அவசியம்: ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்து இருந்தால், எலக்ட்ரானிக் டிக்கெட் என்று கூறப்படும் இ-டிக்கெட் உங்களுக்கு வழங்கப்படும். அந்த இ-டிக்கெட்டின் உண்மையான ஐடியை டிக்கெட் செக்கரிடம் காண்பிக்க வேண்டும். டிக்கெட் செக்கர் உங்கள் இ-டிக்கெட்டைச் சரிபார்க்க வரும்போது உங்களிடம் அந்த ஐடி இல்லை என்றால், நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்கள் என்று முடிவு செய்து கொள்வார். இதற்கும் மேலே குறிப்பிட்டுள்ள அதே அபராதங்கள் பொருந்தும்.
வாங்கிய டிக்கெட்டுக்கு மாறாக அதிக டிக்கெட் கொண்ட இருக்கையில் பயணிப்பது: ஒருவர் பாஸ் பெற்ற அல்லது டிக்கெட் வாங்கியதை விட உயர்ந்த வகுப்பில் பயணம் செய்து பிடிபட்டால், அதிகப்படியான அபராதங்களுடன் அந்த வகுப்பில் செல்வதற்கான கட்டணத்தையும், அந்த நபர் செலுத்த வேண்டும்.
டிக்கெட் இல்லாமல் இளைஞர் பயணம் செய்தால் அவருக்கு குறைந்தபட்ச அபராதமான ரூ. 250 மற்றும் கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.
குடிபோதையில் பயணம்: ஒருவர் குடிபோதையில் ரயிலில் பயணம் செய்தாலோ அல்லது பயணம் செய்யும் போது மது அருந்தினாலோ, அந்த நபர் ரயிலில் இருந்து வெளியேற்றப்படுவார். மேலும் அவருக்கு 6 மாத சிறைதண்டனையுடன் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.
புகை பிடித்துக் கொண்டே பயணம்: ரயிலில் பயணிக்கும் பொழுது புகை பிடிக்க அனுமதி இல்லை. யாரேனும் புகை பிடித்து மாட்டிக்கொண்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும்.
அவசரச் சங்கிலி: இந்திய ரயில்வே சட்டம் 141வது பிரிவின்படி, சரியான காரணமின்றி அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினால் ஒரு வருட சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும். சில முறை இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications