இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் இந்தியன் ரயில்வே மூலம் பயணம் செய்கின்றனர். இதற்காக பிரத்தியேகமாக ஆயிரக்கணக்கான ரயில்களையும் இந்திய ரயில்வே தொடர்ந்து இயக்கி வருகிறது. மலிவான டிக்கெட் கட்டணம் வசதியான பயணம் ஆகிய காரணங்களால் பலருக்கும் ரயிலில் பயணம் செய்வது பிடிக்கும். ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் வகுத்துள்ளது. இந்த விதிகளில் சில அனைத்து பயணிகளுக்கும் தெரியும். ஆனால் சில விதிமுறைகள் பலருக்கும் தெரியாது.
உதாரணமாக ரயில்களில் செல்லும்போது எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அதேபோல குடித்துவிட்டு பயணம் செய்யக்கூடாது என சில விதிமுறைகள் பலருக்கும் தெரியும்.

ஆனால் ரயிலில் பயணிக்கும் போது எவ்வளவு சாமான்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கும் விதிமுறைகள் இருக்கிறது. விமான விதிகளைப் போன்றே ரயில்வே துறை ரயிலில் பயணம் செய்யும்போது எவ்வளவு சாமான்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு விதிமுறையை வைத்துள்ளது. விமானத்தில் எப்படி அதிக எடையை எடுத்துச் செல்லும்போது தனியாக கட்டணம் செலுத்த வேண்டுமோ.. அதேபோல ரயிலில் நாம் எடுத்துச் செல்லும் பொருட்களின் எடைக்கும் வரம்பு உள்ளது.
எவ்வளவு எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்?: இந்திய ரயில்வேயில் பயணம் செய்வதற்கு ஒரு பயணி தன்னுடன் எவ்வளவு எடையை எடுத்துச் செல்ல முடியும் என்பதற்கான வரம்பைப் பார்ப்போம்.
நீங்கள் ஏசி கோச் ஃபர்ஸ்ட் கிளாசில் பயணம் செய்தால் 70 கிலோ எடையுள்ள லக்கேஜ்கள் வரை எடுத்து செல்லலாம். இதனுடன் 15 கிலோ வரை எடைக்கு விலக்கு கிடைக்கும். ஏசி செகண்ட் கோச்சில் 50 கிலோ எடையுள்ள லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம்.
அதில் 10 கிலோ கூடுதல் விலக்கு கிடைக்கும். நீங்கள் தேர்ட் ஏசி கோச்சில் பயணம் செய்தால் 40 கிலோ எடையுள்ள லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம்.
அதேபோல ஸ்லீப்பர் கோச்சில் 40 கிலோ எடையுள்ள பொருட்கள் வரை எடுத்துச் சொல்லலாம். அதில் 10 கிலோ கூடுதல் விலக்கு கிடைக்கும். செகண்ட் கிளாஸில் பயணிக்கும் போது 35 கிலோ எடையுள்ள பொருட்கள் வரை எடுத்துச் செல்லலாம்.
இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, வரம்பிற்கு மேல் லக்கேஜ்களை எடுத்துச் சென்றாலோ, முன்பதிவு செய்யாமல் கூடுதல் லக்கேஜ்களை எடுத்துச் சென்றாலோ, லக்கேஜின் முன்பதிவுத் தொகையை விட 6 மடங்கு செலுத்த வேண்டும்.
உதாரணமாக, ஒரு பயணி 40 கிலோ கூடுதல் லக்கேஜை எடுத்துக்கொண்டு 500 கி.மீ தூரம் பயணித்தால்,சுமார் 109 ரூபாய் முன்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் முன்பதிவு செய்யாமல் எடுத்துச் சென்றால், பயணி சுமார் ரூ.654 செலுத்த வேண்டும்.
ரயில்வே விதிகளைப் புரிந்து கொள்வது அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். அதுமட்டுமின்றி தெரியாமல் அதிக எடை உள்ள பொருட்களை எடுத்துச் சென்று சிக்கலுக்கு ஆளாகாமல் இருக்க.. இது போன்ற விதிகள் குறித்த விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications