உங்களது சேமிப்பு கணக்கில் நீங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் ஆனால் கையில் ரொக்கம் வைத்திருக்க சில விதிகள் உள்ளன. உங்களது சேமிப்பு கணக்கில் ரொக்கமாக பணம் செலுத்த சில விதிகள் உள்ளன. குறிப்பிட்ட தொகைக்கு மேலாக டெபாசிட் செய்தால் அதுபற்றி வருமான வரிக்கு வங்கிகள் தகவல் தரவேண்டும். இன்றைய சூழலில் எல்லாருக்குமே வங்கியில் சேமிப்பு கணக்கு தேவைப்படுகிறது. இந்தக் கணக்கு இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. பல்வேறு அரசு திட்டங்களுக்கும் இந்த கணக்கு தேவைப்படுகிறது.
இந்தியாவில் சேமிப்பு கணக்கை வங்கியில் தொடங்குவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இதனால்தான் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்கின்றனர். சேமிப்பு கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாக இருப்பதோடு வட்டியையும் தருகிறது.

ஜீரோ பாலன்ஸ் அக்கவுன்ட் தவிர மற்ற சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பணம் வைத்திருக்க எந்த வரம்பும் இல்லை.
அதேநேரத்தில் குறிப்பிட்ட அளவுக்கு ரொக்கமாக பணம் செலுத்தினால் அது வருமான வரித்துறையின் கவனத்துக்கு வந்துவிடும். அந்த தொகைக்கான மூலத்தை கூற வேண்டும்.
உங்களது கணக்கு என்றாலும் அதிலிருந்து குறிப்பிட்ட அளவுக்கு பணத்தை எடுக்கும் போது வரம்பை பின்பற்ற வேண்டும். நீங்கள் ரொக்கமாக ரூ.50,000-ஐ வரை கணக்கில் செலுத்தலாம். அதற்கு மேல் என்றால் உங்களது பான் கார்டு விவரத்தை குறிப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு ரொக்கமாக ரூ.1 லட்சம் செலுத்தலாம்.
தொடர்ச்சியாக ரொக்கம் டெபாசிட் செய்யாதபட்சத்தில் ரூ.2.5 லட்சம் வரை செலுத்தலாம். ஒரு நிதியாண்டில் உங்கள் கணக்கில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கி இது குறித்து வருமான வரித் துறைக்கு தகவல் தர வேண்டும்.
அந்தப் பணத்துக்கான மூலத்தை வருமான வரித் துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.
தவறான தகவல் தந்ததாக உணர்ந்தால் அதிகாரிகள் உங்கள் வீடுகளில் ரெய்டு செய்வர்.
தவறு செய்தவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். 60 சதவீத வரியும் 25 சதவீத உபவரியும் 4 சதவீத செஸ்ஸும் விதிக்கப்படும்.
ஆனால் அதற்காக ரூ.10 லட்சத்துக்கு மேலாக டெபாசிட் செய்ய முடியாது என்றில்லை. தகுந்த ஆதாரங்களுடன் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.
இதுபோன்று அதிக அளவு பணத்தை சேமிப்பு கணக்கில் வைத்திருப்பதற்கு பதில் அதை பிக்சட் டெபாசிட் அல்லது ரெக்கரிங் டெபாசிட்டாக மாற்றிக் கொள்ளலாம்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications