நகரமயமாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக சொந்த ஊரில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, வாடகை வீடுகளுக்கு உள்ள தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. பலரும் தங்கள் சொந்த வீடுகளை விட்டுக் கொஞ்சநாள் தங்கும் இடமாக வாடகை வீடுகளை தேர்வு செய்கின்றனர். இன்னும் சிலர், காலம் முழுவதும் வாடகை வீட்டிலேயே தங்குகின்றனர். இந்நிலையில் தான், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாடகைதாரரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சட்ட உரிமைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இந்தியாவில் பிளாட், வீடு அல்லது அறையை வாடகைக்கு எடுப்பவர்கள் பெரும்பாலும் சட்ட உரிமைகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் பின்னர் அவதிப்படுகின்றனர். வாடகைதாரராக இருப்பது உங்கள் உரிமைகளை இழப்பதாக அல்ல. சில முக்கியமான சட்டப்பூர்வ பாதுகாப்புகள் உங்களுக்கும் உண்டு.

உங்கள் அனுமதி தேவை : நீங்கள் குடியிருக்கும் வீடு, வாடகை வீடாகவே இருந்தாலும் உங்கள் அனுமதியின்றி வீட்டின் உரிமையாளர் உள்ளே வருவது சட்டவிரோதம் ஆகும். முன் அறிவிப்பு ஏதும் இன்றி உங்கள் வீட்டிற்குள் அவர் நுழையக் கூடாது. இது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது.
வாடகை ஒப்பந்த பதிவு அவசியம் :11 மாதங்களுக்கு மேல் வீட்டில் தங்குவோர், முத்திரை வரியுடன் ஒப்பந்தத்தை சட்டப்படி பதிவு செய்திருக்க வேண்டும். சாதாரண காகிதத்தில் எழுதப்பட்ட ஒப்பந்தம் நீதிமன்றத்தில் செல்லாது என்பதால், சட்டப்படி பதிவு செய்வது அவசியமாகும். இது மோசடி சமயங்களில் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.
ஒரே இரவில் வெளியேற்ற முடியாது : வாடகை வீட்டில் தங்கியிருக்கும் போது ஏதேனும் சண்டை, வாடகை தாமதம் போன்ற பிரச்சனைகளை காரணம் காட்டி, அந்த வீட்டில் இருந்து உங்களை உடனே வெளியேற்ற முடியாது. வீட்டு உரிமையாளர் உங்களுக்கு முன்கூட்டியே இதுகுறித்து தெரிவித்திருக்க வேண்டும். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அதன் பின்னரே கோர்ட் உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும்.
அட்வான்ஸ் தொகை வரம்புகள் : வாடகை வீடு எடுக்கும்போது, வீட்டு உரிமையாளர் உங்களுக்கு அட்வாஸ் தொகை கேட்கலாம். ஆனால், பல மாநிலங்களில் இதற்கென சட்ட வரம்புகள் உள்ளன. அதாவது, டெல்லியில் அதிகபட்சம் 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க முடியும். அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்டப்படி, 2 மாத வாடகை வரை தான் கேட்க முடியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை 3 மாத வாடகையை விட அதிகமாக அட்வான்ஸ் கேட்பது என்பது சட்டத்திற்கு புறம்பானதாகும். (உதாரணமாக, 6 முதல் 10 மாதங்கள் வரை அட்வான்ஸ் தொகை கேட்பது சட்டவிரோதம்)
வாடகை ரசீதுகள் ஏன் அவசியம்..?:வாடகை செலுத்தும் போது, ரொக்கமாக (Cash) கொடுத்தால் கூட, வாடகைதாரர் கேட்டால் வாடகை ரசீதை (Rent Receipt) உரிமையாளர் வழங்க வேண்டும். ஏனென்றால், HRA (House Rent Allowance) கோரிக்கைக்காக உங்கள் பணியிடங்களில் HRA தொகையை பெற வேண்டும் என்றால், வாடகை ரசீது அவசியம். மேலும், உங்கள் வாடகையை செலுத்தியதற்கான சட்ட ரீதியான ஆதாரமாக இந்த ரசீது பயன்படும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications