கோடக் மகேந்திரா வங்கியின் நிகரலாபம் 26.6 சதவீதம் அதிகரித்து, 2,184.48 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டில் 1,724.48 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே சிஎன்பிசி - டிவி 18 நிபுணர்கள் 1,394.4 கோடி ரூபாயாக லாபம் காணலாம் என்று கணித்திருந்தனர்.
இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் விகிதம் 17 சதவீதம் அதிகரித்து 3,913 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3,350 கோடி ரூபாயாக இருந்தது. நிகர வட்டி மார்ஜின் தொகையானது 4.52% ஆக உள்ளது. இது இன்னும் மதிப்பீட்டில் உள்ளதாகவும் இவ்வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செயல்பாட்டு லாபம் 31 சதவீதம் அதிகரித்து, 3,297 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2,509 கோடி ரூபாயாக இருந்தது.
இதே காசா விகிதம் செப்டம்பர் காலாண்டில் 57.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 53.6 சதவீதமாக இருந்தது.
வட்டி வருவாய் அதிகரித்துள்ள அதே நேரத்தில் கடன் விகிதமும் 4 சதவீதம் குறைந்து 2.04 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே டெபாசிட் விகிதம் 12.2 சதவீதம் அதிகரித்து 2.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒருங்கிணைந்த நிகரலாபம் 22 சதவீதம் அதிகரித்து, 2,947 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் வங்கியின் பங்களிப்பு 2,184 கோடி ரூபாயாக உள்ளது.
இதற்கிடையில் கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் லாபம் 33.6 சதவீதம் அதிகரித்து, 199 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கோடக் மகேந்திரா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் லாபம் 18.8 சதவீதம் அதிகரித்து, 171 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. எனினும் கோடக் பிரைமின் லாபம் 22.7 சதவீதம் குறைந்து, 133 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த செப்டம்பர் காலாண்டில் எல்ஐசி நிறுவனம், கோடக் மகேந்திரா வங்கியில் தனது பங்கு விகிதத்தினை 3.18% பங்குகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் காலாண்டில் 2.45 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோடக் மகேந்திராவின் பங்கு விலையானது 1.36% அதிகரித்து, 1401 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications