Kohinoor வைரத்தின் இன்றைய மதிப்பு என்ன தெரியுமா..? கிழக்கிந்திய கம்பெனி செய்தது என்ன?

1757 இல் பிளாசி போருக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிறுவினர். இந்த காலக்கட்டத்தை தான் நாம் காலனித்துவ ஆட்சி என்றும் குறிப்பிடுகிறோம். பிரிட்டிஷ் அரசு இந்தியாவை நேரடியாக கட்டுப்படுத்துவதற்கு முன்பு, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது.

இப்படி இந்தியா சுமார் 90 ஆண்டுகள் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்ட போது பிரிட்டிஷ் படை இந்திய அரச சாம்ராஜ்யத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான் கோஹினூர் வைரம். இது உலகில் மிகவும் அரிதான வைரமாக பார்க்கப்படுகிறது. கடந்த 15 வருடத்தில் பல நாடுகள் போர் காலத்தில் கைப்பற்றிய வரலாற்று பொக்கிஷங்களை தத்தம் நாடுகளுக்கு அளித்து வருகிறது.

Kohinoor வைரத்தின் இன்றைய மதிப்பு என்ன தெரியுமா..? கிழக்கிந்திய கம்பெனி செய்தது என்ன?

இதனால் இந்தியாவிற்கு இங்கிலாந்து அரசு இந்த கோஹினூர் வைரத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற கருத்து நீண்ட நாட்களாக இருக்கும் நிலையில், ராணி எலிசபெத் மறைவிற்கு பின்பும், பிரிட்டன் பிரதமராக இந்தியர் ரிஷி சுனக் பதவியேற்றிய நாளில் இருந்து அவ்வப்போது கோஹினூர் வைரம் குறித்த விவாதம் சமுகவலைத்தளத்தில் எழுந்து வருகிறது.

ராணி எலிசபெத் இறப்பதற்கு முன் அணிந்திருந்த அவருடைய ஆடம்பர மற்றும் பாரம்பரியமிக்க கிரீடத்தில் கோஹினூர் வைரம் கடைசியாக காணப்பட்டது. பிரிட்டன் அரச குடும்பத்தின் பாரம்பரியத்தின் படி, ராணி எலிசபெத் இறந்த பின்பு இந்த கிரீடத்தை ராணி கமிலா அணிய வேண்டும், ஆனால் இந்த விலைமதிப்பற்ற மற்றும் பிரம்மாண்டமான கோஹினூர் வைரத்தின் சர்ச்சைக்குரிய வரலாறு காரணமாக அதை அணிய மறுத்துவிட்டார்.

Kohinoor வைரத்தின் இன்றைய மதிப்பு என்ன தெரியுமா..? கிழக்கிந்திய கம்பெனி செய்தது என்ன?

பிரிட்டன் அரசராக பொறுப்பேற்றுள்ள சார்லஸின் முடிசூட்டு விழாவில் அவருடைய மனைவி மற்றும் அதிகாரப்பூர்வமாக ராணியாக முடிசூட்டப்படும் கமிலா, விலைமதிப்பற்ற கோஹினூர் வைரத்தை கொண்ட கிரீடத்தை அணிய தவிர்த்துவிடுவதாகவும், அதற்கு பதிலாக ராணி மேரியின் பழைய கிரீடத்தை அணிவதாகவும் கூறினார்.

கோஹினூர் வைரம் தொடர்பான சமீபத்திய விவரக்குறிப்புகள் அடிப்படையில், கிழக்கிந்திய கம்பெனியால் பஞ்சாப்-ல் இருந்து கொண்டு வரப்பட்டு விக்டோரியா மகாராணியின் கிரீடத்தில் பொருத்தப்படுவதற்கு முன்பு, கோஹினூர் வைரத்தின் பதிவு செய்யப்பட்ட எடை சுமார் 186 old carats அதாவது 191 மெட்ரிக் கேரட் அல்லது 38.2 கிராம் ஆகும்.

Kohinoor வைரத்தின் இன்றைய மதிப்பு என்ன தெரியுமா..? கிழக்கிந்திய கம்பெனி செய்தது என்ன?

கோஹினூர் வைரத்தின் மிகப்பெரிய அளவு மற்றும் எடை மூலம் இது உலகின் மிக விலையுயர்ந்த வைரமாக உருவெடுத்துள்ளது. கோஹினூர் வைரத்தின் இன்றைய சந்தை மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 1.64 லட்சம் கோடி ரூபாய்.

உலகின் மிக விலையுயர்ந்த வைரமாக இருக்கும் கோஹினூர் வைரம் இந்தியாவின் பஞ்சாபில் இருந்து வந்ததாக அறியப்படுகிறது. இந்தியாவில் சீக்கிய சாம்ராஜ்யத்தை ஆண்ட மகாராஜா துலீப் சிங்கிற்கு சொந்தமானது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கிழக்கிந்திய கம்பெனி பஞ்சாப்-ஐ இணைத்ததை தொடர்ந்து விக்டோரியா மகாராணியை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த பிறகு, கோஹினூர் வைரம் ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டு ராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+