கோஹினூர் வைரம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வி நீண்ட காலமாக நீடிக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட கோஹினூர் வைரமானது மீண்டும் திரும்பி தரப்படவில்லை.
இந்த நிலையில் கோஹினூர் வைரத்தை பிரிட்டிஷாரிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்து இந்தியாவில் வைக்க வேண்டும் என்ற வாதங்கள் எழுந்து வருகின்றன. அவ்வப்போது கோஹினூர் வைரம் யாருக்கு சொந்தமானது என்ற குழப்பம் அடிக்கடி எழுகிறது.

கோஹினூர் வைரம் பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டது. 105.6 கேரட் எடை கொண்ட கண்கவர் கோஹினூர் வைரம் காலம் காலமாக வீரம், வெற்றி, மதிப்பு, அதிகாரம் ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. யாரிடம் இந்த வைரம் இருக்கிறதோ அந்த ஆட்சியாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்துள்ளனர். எனவே இந்த வைரத்தை கைப்பற்ற அரசர்கள் இடையே போட்டி நிலவி வந்திருக்கிறது.
தற்போது கோஹினூர் வைரமானது பிரிட்டிஷ் மகுடத்தை அலங்கரிக்கிறது. உண்மையில் இந்த கோஹினூர் வைரம் யாருக்கு சொந்தமானது முகலாயர்களுக்கா? பிரிட்டிஷ்காரர்களுக்கா?. இருவருமே இல்லை உண்மையில் கோஹினூர் வைரம் காக்கட்டியா சமூகத்தினருக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது.
தற்போதைய ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளை 12ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்தவர்கள் தான் காக்கட்டியா வம்சத்தினர். அந்த காலகட்டத்தில் சக்தி வாய்ந்த அரச வம்சமாக காக்கட்டியா வம்சம் திகழ்ந்தது. கோஹினூர் வைரத்தின் உரிமையாளர்கள் இவர்களே என நம்பப்படுகிறது. காக்கட்டியா அரசு வம்சத்தினர், கோஹினூர் வைரத்தை தங்கள் சக்தி மற்றும் கௌரவத்தின் அடையாளமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
கோஹினூர் வைரத்தின் சரியான தோற்றம் என்பது இதுவரை மர்மமாகவே இருந்து வருகிறது. கிமு நான்காம் நூற்றாண்டுக்கு முந்தைய பண்டைய சமஸ்கிருத நூல்களில் கோஹினூர் வைரம் குறித்த குறிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது பற்றிய முதல் பதிவு முகலாயப் பேரரசை நிறுவிய பாபரிடமிருந்து வருகிறது.
அதாவது பாபர் 1526 இல் டெல்லி சுல்தானிடம் இருந்து கோஹினூர் வைரத்தை வாங்கியதாக குறிப்புகள் கூறுகின்றன. காக்கட்டியா வம்சத்தில் 1199 முதல் 1262 வரை ஆட்சி செய்த கணபதி தேவா மற்றும் அவரது மகள் ருத்ரமாதேவி ஆகியோர் கோஹினூர் வைரத்தை வைத்திருப்பதை பெருமையாக கருதியுள்ளனர்.
இவர்களது ஆட்சியின் கீழ் தான் கோஹினூர் இருந்துள்ளதாக தெரிய வருகிறது. பின்னாளில் அதாவது 1849 ஆம் ஆண்டில் பஞ்சாப் பகுதி இணைக்கப்பட்டது தொடர்ந்து கோஹினூர் வைரமானது பிரிட்டிஷார் வசம் சென்றது.
இந்தியா விடுதலை பெற்ற போது இந்த வைரம் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. பிரிட்டிஷ் அரச வம்சத்தின் மகுடத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த வைரத்தை மீட்டு இந்தியா கொண்டு வந்து அந்த வைரத்தின் பாரம்பரியத்தை நிலைநாட்ட வேண்டும் என பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications