இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோரின் தாயாரான கோகிலாபென் அம்பானி, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள எச்.என். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு 91 வயதாகிறது, அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அம்பானி குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு சென்றனர். இந்தச் செய்தி, அம்பானி குடும்பத்தினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், மருத்துவக் குழு கோகிலாபென் அம்பானியின் உடல்நிலையை ஆய்வு செய்து, தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு, அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது, அம்பானி குடும்பத்தின் வாகனங்கள் தெற்கு மும்பையில் உள்ள எச்.என்.ரிலையன்ஸ் மருத்துவமனையை நோக்கி செல்லும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது. கோகிலாபென் அம்பானியின் முதிய வயது காரணமாக, இந்த உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. மொத்தம் 17 வாகனம்.
இந்தச் சம்பவம், இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குடும்பமான அம்பானி குடும்பத்தின் மீதான பொதுமக்களின் கவனத்தை அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் திருமணத்திற்கு பின்பு மீண்டும் திருப்பியுள்ளது.
தற்போது வரை, கோகிலாபென் அம்பானியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அல்லது மருத்துவமனை நிர்வாகம் எந்த விரிவான தகவலையும் வெளியிடவில்லை. ஊடகங்களிடையே பல்வேறு ஊகங்கள் இருக்கும் வேளையில், மருத்துவமனையில் அவருக்கு உரிய பராமரிப்பு மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அம்பானி குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நெருக்கடியான சூழலில், அம்பானி குடும்பத்தினர் அனைவரும் மும்பை மருத்துவமனையில் ஒன்றிணைந்துள்ளனர். முகேஷ் அம்பானி, மருத்துவமனைக்கு அவசரமாக வந்து சேர்ந்ததாகவும், அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டினா அம்பானி ஆகியோர் மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications