மும்பை: அம்பானி குடும்பத்தின் பெண்கள் பல்வேறு வழிகளில் அம்பானி குடும்பத்தின் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளனர். அவர்களின் ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் வணிகம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம் குடும்பத்தின் வெற்றிக்கு பங்களித்துள்ளனர்.
அவர்களின் பங்களிப்புகளில் குடும்ப விவகாரங்களை நிர்வகித்தல், நுண்ணறிவு மற்றும் ஆலோசனைகளை வழங்குதல், ஆதரவான சூழலை உருவாக்குவது மற்றும் தொண்டு முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்பது ஆகியவை அடங்கும். கோகிலாபென் அம்பானி முதல் இஷா அம்பானியின் மகள் வரை, அவர்களின் பங்களிப்பு சிலவற்றைக் இங்கே காண்போம்.

கோகிலாபென் அம்பானி: திருபாய் அம்பானி கோகிலாபென் அம்பானி-யை 1955 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரது நிலையான வழிகாட்டுதல் ஒட்டுமொத்த குடும்பத்தையும் வழிநடத்தியது. கோகிலாபென் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய்.

அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்ஸில் பங்குகளை வைத்திருக்கிறார். அவரின் சரியான வழிநடத்தும் திறன் பல வெற்றிகளை அம்பானி குடும்பத்திற்கு பெற்று தருகிறது என சொன்னால் அது மிகை ஆகாது.
நினா கோத்தாரி: நினா கோத்தாரி தனது சகோதரர்களைப் போலவே பிசினஸ் மைண்ட் செட் கொண்டவர், மற்றும் ஏராளமான சொத்துக்களை நினா கோத்தாரி வைத்திருக்கிறார். இவர் கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். பத்ராஷ்யம் கோத்தாரியை, நினா கோத்தாரி 1986 ஆம் ஆண்டு மணந்து கொண்டார். அவருக்கு அர்ஜுன் மற்றும் நயன்தாரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நயன்தாரா: நயன்தாரா, நீனா கோத்தாரி மற்றும் பத்ரஷ்யம் கோத்தாரியின் மகள். ஷ்யாம் மற்றும் ஷோபனா பார்டியாவின் மகனும் கே.கே.பிர்லாவின் பேரனுமான ஷமித் பார்தியாவை மணந்து கொண்டார். நயன்தாராவின் நிகர சொத்து மதிப்பு ரூ.52.4 கோடி மற்றும் நிறுவனத்தில் இரண்டு பங்குகளையும் வைத்துள்ளளார்.

தீப்தி சல்கோகர்: திருபாய் அம்பானியின் மகள் தீப்தி அம்பானி. அவர் தனது கணவர் தத்தராஜ் சல்கோகர் அவர்களால் நிறுவப்பட்ட சுனபரந்தாவின் ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினராக உள்ளார்.

இஷேதா சல்கோகர்: இஷேதா சல்கோகர் தீப்தி சல்கோகரின் மகள். இஷேதா நெக்ஸு மொபிலிட்டியின் நிறுவனர் அதுல்யா மிட்டலை மணந்துகொண்டார். அதற்கு முன், நீரவ் மோடியின் தம்பியான நீஷால் மோடியை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் சில பிரச்சனை காரணமாக பிரிந்தனர். தற்போது, சல்கோகர் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் கார்ப்பரேட் டெவலப்மென்ட் லிமிடெட் துணைத் தலைவராக இஷேதா பணிபுரிகிறார்.

டினா அம்பானி: இவர் அனில் அம்பானியின் மனைவி ஆவார். இவர் ஒரு பிரபல பாலிவுட் நடிகையாக வளம் வந்தவர். இவர் பாலிவுட் உலகத்தை விட்டு தனது மேற்படிப்பிற்காக கலிபோர்னியா சென்றார்.

குடும்பத் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் டினா, ஹார்மனி ஆர்ட் ஃபவுண்டேஷனையும் தொடங்கியுள்ளார். அவர் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் ரிலையன்ஸ் மருத்துவமனைகளின் தலைவராக இருந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.2,331 கோடி.
நீதா அம்பானி: நீதா அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய பிணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி. நீதா அம்பானி ஆடம்பர விருபங்களுக்கு பெயர் பெற்றவர். அவரது நிகர மதிப்பு 2.8-3 பில்லியன் டாலர்கள்.

இஷா அம்பானி: இஷா அம்பானி, முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் மகள் ஆவார். ரிலையன்ஸ் ரீடெய்ல், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆகியவற்றில் தலைமைக் குழுக்களில் ஈடுபட்டுள்ளளார் இஷா. இவரது சொத்து மதிப்பு ரூ.831 கோடி.

ஆனந்திதா கோத்தாரி:ஆனந்திதா கோத்தாரி அர்ஜுன் கோத்தாரியை மணந்தார். இவரது சொத்து மதிப்பு 49.9 கோடி ரூபாய்.

கிருஷ்ணா ஷா அம்பானி: அனில் அம்பானி மற்றும் டினா அம்பானியின் மகனான ஜெய் அன்மோல் அம்பானியை கிருஷ்ணா ஷா அம்பானி மணந்து கொண்டார். இவர் சோசியல் நெட்வொர்க்கிங் நிறுவனமான டிஸ்கோவின் நிறுவனர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 3-4 கோடி ரூபாய்.

ஷ்லோகா மேத்தா: ஷ்லோகா மேத்தா ஆகாஷ் அம்பானியை திருமணம் செய்த பின் அந்த வீட்டின் மூத்த மருமகள் ஆனார். ஷ்லோகா மேத்தா அருண் ரஸ்ஸல் மேத்தா மற்றும் மோனா மேத்தா ஆகியோரின் மகள். இவரது சொத்து மதிப்பு சுமார் 120 கோடி ரூபாய்.

ராதிகா மெர்ச்சன்ட்: விரைவில் ஆனந்த் அம்பானியை மணக்க உள்ளார் ராதிகா மெர்ச்சன்ட். இவர் என்கோர் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சண்ட் ஆகியோரின் மகள் ஆவார். இவரது சொத்து மதிப்பு ரூ.10 கோடி.

ஆதிய பிரமல்: ஆதிய பிரமல் பிரமல் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமாலின் மகள் ஆவார்.

More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications