இந்தியா பல்வேறு கலாச்சாரங்களையும் பாரம்பரிய கலைகளையும் கொண்ட ஒரு நாடு. இங்கே இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு என தனித்துவமான கலை நயம் மிக்க பொருட்களை கொண்டு இருக்கின்றன. அப்படி ஒன்றுதான் கோலாபூரி செருப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாபூர் நகரில் உருவாகக்கூடிய பாரம்பரியமான காலணி வகை இது. பல நூற்றாண்டுகளாக இந்தியர்கள் பெருமையுடன் விரும்பி அணியும் கோலாபூரி செருப்புகள். தோல் கொண்டு கோலாபூர் மக்களால் கைகளில் தயாரிக்கப்படுகிறது. இதன் தனித்துவமான வடிவமைப்பும், தரமும் எப்போதுமே மக்களை ஈர்க்கிறது. இந்திய பாரம்பரியம் கொண்ட இந்த செருப்பு சர்வதேச ஃபேஷன் அடையாளமாக மாறி இருக்கிறது.

மிலன் நகரில் சர்வதேச ஆடம்பர நிறுவனமான பிரதா கோடைகால பேஷன் ஷோ நிகழ்ச்சியை நடத்தியது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாடல்கள் இதில் கலந்துகொண்டனர். இவ்வாறு கலந்து கொண்ட 56 மாடல்களில் ஏழு பேர் இந்தியாவின் பாரம்பரியம் கொண்ட கோலாபுரி செப்பல்களை அணிந்திருந்தனர். பிரதா நிறுவனம் இந்த செருப்புகளுக்கு 1.16 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்திருந்தது.
பிரதா மற்றும் ராப் சைமன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த செருப்புகளை தங்களின் பெயரில் விற்பனை செய்கின்றன. இந்திய பாரம்பரியம் கொண்ட செருப்புகளை கோலாபூரி செருப்பு என கூறாமல், தோல் செருப்பு என்ற பெயரில் விற்பனை செய்கின்றன. இந்தியாவின் கோலாபுரி செருப்புகளை இந்த நிறுவனங்கள் தங்களுடைய பெயரில் பிராண்டிங் செய்வது மட்டும் இல்லாமல், இந்தியாவில் இருந்து வந்தது என்பதையும் இந்திய கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்டது என்பதையும் ஏன் கூற மறுக்கின்றன என்பது தான் இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த செய்துள்ளது.

எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பயனர் எழுதியுள்ள பதிவில் பிரதா நிறுவனம் கோலாபுரி செப்பல்களை 1.2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறது, மகாராஷ்டிரா மாநிலத்தின் பாரம்பரியத்தோடும் கோலாபுரி நகர மக்களால் கைகளால் தயாரிக்கப்படும் இந்த செப்பலை பிரதா நிறுவனம் தன்னுடைய லோகோ பதிவு செய்துவிட்டு லெதர் சாண்டல் என்ற பெயரில் விற்பனை செய்கிறது. இது ஆடம்பரம் அல்ல இது திருட்டு என சாடி இருக்கிறார் .
இந்தியாவில் 300 இல் இருந்து 1500 ரூபாய்க்கு கிடைக்க கூடிய இந்த செப்பல்களை இந்த நிறுவனம் 1.2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறது என்றும் கூறியிருக்கிறார். மற்றொரு பயனர் பிரதா நிறுவனம் இந்திய கைவினை கலைஞர்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வரும் வடிவங்களையும் கலையையும் பிரதான நிறுவனம் திருடி இருக்கிறது என கூறி இருக்கிறார், எங்களின் கலை வேண்டும், எங்களின் பாரம்பரியம் வேண்டும் ஆனால் அதற்கு உரிய அங்கீகாரத்தை வழங்கமாட்டீர்கள் இது ஒரு கலாச்சார திருட்டு என கூறியிருக்கிறார் .
ஒரு பயனர் கோலாபுரி செப்பலை வாங்கி விற்பனை செய்கிறீர்கள் ஆனால் கோலாபுரி என அதன் பெயரைக் கூறுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை எங்களின் அடையாளத்தை ஏன் திருடுகிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications