இந்தியாவின் போக்குவரத்து நெரிசல் அளவில் பெரும் மாற்றம் நடந்துள்ளதை 2024 டாம்டாம் டிராபிக் இன்டெக்ஸ் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது, இந்தியாவில் மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரமாக கொல்கத்தா உருவெடுத்துள்ளது. இதன் மூலம் பெங்களூருவை வீழ்த்தி இந்தியாவின் மிகவும் நெரிசலான நகரம் என்ற பட்டத்தை கொல்கத்தா பெற்றுள்ளது.
பெங்களூர் என்றாலே அனைவரும் ஐடி சிட்டி என கூறுவதை தாண்டி டிராபிக் பிரச்சனையை தான் அதிகம் பேசுகின்றனர், அந்த அளவுக்கு டிராபிக் மோசமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில வருடத்தில் மெட்ரோ, சாலை விரிவாக்கம், டிராபிக் சிக்னலில் மாற்றம், புதிய டிராபிக் தகவல் அப்டேட் என பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெங்களூர் இந்தியாவின் மோசமான டிராபிக் கொண்ட நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 2ஆம் இடத்திற்கு தள்ளியுள்ளது.

கொல்கத்தா தற்போது உலகின் இரண்டாவது மெதுவாக நகரும் நகரமாக உள்ளது, கொலம்பியாவின் பாரன்க்விலாவுக்கு (Barranquilla) அடுத்தபடியாக உள்ளது. Barranquilla-வில் ஓட்டுநர்கள் 10 கிமீ தூரத்தை கடக்க 36 நிமிடங்கள் ஆகும், அதாவது சராசரியாக வெறும் 10.3 மைல் என்ற வேகத்தில் பயணித்து வருகின்றனர்.
டச்சு தொழில்நுட்ப நிறுவனமான டாம்டாம் தொகுத்த இந்த ஆண்டு டிராபிக் இன்டெக்ஸ்-ல் 62 நாடுகளில் 500 க்கும் மேற்பட்ட நகரங்களில் போக்குவரத்து நிலைகளை ஆய்வு செய்துள்ளது. தற்போது இந்த கணக்கெடுப்புகள் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவில், ஓட்டுநர்கள் சராசரியாக 17.4 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும், 10 கிமீ தூரத்தை கடக்க 34 நிமிடங்கள் 33 வினாடிகள் எடுப்பதாக டாம்டாம் டிராபிக் இன்டெக்ஸ் கூறுகிறது.
பெங்களூரு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது, இங்கு வாகன ஓட்டுநர்கள் அதே தூரத்தை கடக்க 34 நிமிடங்கள் 10 வினாடிகள் செலவிடுகிறார்கள். பெங்களூர்-க்கு அடுத்தப்படியாக புனே 10 கிமீ தூரத்திற்கு 33 நிமிடங்கள் 22 வினாடிகள் சராசரி பயண நேரத்துடன் உள்ளது.
இந்த டிராபிக் இன்டெக்ஸ் இந்திய நகரங்கள் எதிர்கொள்ளும் கடுமையான போக்குவரத்து சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஹைதராபாத், சென்னை மற்றும் மும்பையும் 10 கிமீ தூரத்திற்கு முறையே 32 நிமிடங்கள், 30 நிமிடங்கள் மற்றும் 29 நிமிடங்கள் சராசரி பயண நேரத்துடன் மோசமான டிராபிக் கொண்ட நகரங்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
அகமதாபாத், எர்ணாகுளம் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற நகரங்களும் கடுமையான டிராபிக் கொண்டு உள்ளது. அகமதாபாத் மற்றும் எர்ணாகுளம் மும்பையின் பயண நேரமான 29 நிமிடங்களுடன் உள்ளது, அதே தூரத்திற்கு ஜெய்ப்பூர் 28 நிமிடங்கள் சராசரி பயண நேரத்தை பதிவு செய்தது. மிகவும் நெரிசலான நகரமாக கருதப்படும் டெல்லி, 10 கிமீ தூரத்திற்கு 23 நிமிடங்கள் சராசரி பயண நேரத்துடன் பட்டியலில் கீழே உள்ளது.
இந்திய நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க விரிவான நகர்ப்புற திட்டமிடல் மற்றும் போக்குவரத்து நெரிசலை எளிதாக்கும் தீர்வுகளின் முக்கியத்துவத்தை டாம்டாம் டிராபிக் இன்டெக்ஸ் வலியுறுத்துகிறது. மேலும் பொது போக்குவரத்தில் முதலீடு, மேம்படுத்தப்பட்ட சாலை கட்டமைப்பு மற்றும் சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்க மற்றும் நடந்து செல்வது போன்ற நிலையான போக்குவரத்து விருப்பங்களை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications