கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய விமர்சனம் சமூக தளத்தில் வைரலாகியுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல்வேறு அம்சங்கள், பயண அனுபவம் பற்றி விரிவாக இந்தப் பதிவில் விவரிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் வழங்கப்படும் உணவு சுமாராக இருப்பதாக அந்தப் பயணி குறிப்பிட்டுள்ளார். சதாப்தி எக்ஸ்பிரஸில் வழங்கப்படும் உணவைக் காட்டிலும் இது மட்டமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் வழங்கப்படும் ஸ்நாக்ஸ் தொகுப்பில் ஒரு வறுத்த நிலக்கடலை பாக்கெட், இன்ஸ்டன்ட் டீ பாக்கெட், டயட் அவல் மிக்சர் தரப்படுகிறது. இது பரவாயில்லை என்று கூறியுள்ளார். இரவு சாப்பாடுக்கு பருப்பு, சாதம், சப்பாத்தி, குழம்பு, காய்கறி, தயிர், ஐஸ்கிரீம் வழங்கப்படுகிறது. இதுவும் பரவாயில்லை என்கிறார்.
பிற அம்சங்கள் பற்றி கூறுகையில் ரயிலில் உள்ள அட்டோமேடிக் கதவுகளில் கண் பார்வையற்றவர்கள் வசதிக்கா பிரெய்ல் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன என்றும். ஜன்னல்களில் உள்ள விண்டோ ஷீல்டு சூரிய ஒளியை அந்தளவுக்க மறைப்பதாக இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த ரயிலில் உள்ள கழிவறைகள் மிகவும் சுத்தமாக இருப்பதாக அந்தப் பயணி பதிவிட்டுள்ளார். இந்திய மற்றும் வெஸ்டர்ன் டாய்லெட்டுகள் இருப்பதாகவும் இது வேறு எந்த ரயில்களிலும் இல்லாத அளவுககு சுத்தமாகப் பராமரிக்கப்படுவதாகக் கூறுகிறார்.
உள்ளே ஹேண்டு வாஷ் டிஸ்பென்ஸர்கள், ஆட்டோமேடிக் ஹேண்டு டிரையர்கள் இருக்கின்றன. ஃப்ளஷ் நன்றாக வேலை செய்வதாகவும் கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட இந்தப் பதிவு இதுவரை 10 லட்சம் பார்வையைப் பெற்றுள்ளது.
இந்தப் பதிவுக்கு ஏகப்பட்ட யூஸர்கள் கமெண்ட் செய்துள்ளனர். அதில் தங்களது வந்தே பாரத் ரயில் அனுபவத்தை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
இந்த வசதிகள் எல்லாம் ரயில்வே துறை நவீனமயமாக்கலை காட்டுகிறது.
வரும் ஆண்டுகளில் ரயில்களின் தரம் மேலும் அதிகரிக்கும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications