கோமாகி என்ற எலக்ட்ரிக் வாகன நிறுவனம், செவ்வாய்க்கிழமை அன்று தனது புதிய X3 ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 52,999 ரூபாயாகும். ஆனால் மகளிர் தினத்தை முன்னிட்டு 2 ஸ்கூட்டர்களை ரூ.99,999 என்ற விலையில் விற்பனை செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கான விளம்பரத்தையும் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.
கோமாகி X3 சீரிஸில் வேகமாக ஜார்ஜ் ஏறக்கூடிய திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரிகள், டிஜிட்டல் டேஷ்போர்டு, மல்டிபிள் ரைட்டிங் மோட் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்தக் ஸ்கூட்டர்களில் எல்இடி லைட்டிங் மற்றும் பிரீமியம் அலாய் வீல்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

"எங்கள் புதிய X3 தொடரின் அறிமுகம் நாட்டின் மின்சார வாகனப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் மற்றொரு மைல்கல்," என்று கோமாகி எலெக்ட்ரிக் வாகனங்களின் இணை நிறுவனர் குஞ்சன் மல்ஹோத்ரா கூறினார். இந்த மாடல் பெண் ஓட்டுநர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வகை X3 ஸ்கூட்டர்களை இந்தியா முழுவதிலும் உள்ள கோமாகி டீலர்ஷிப் மூலமாகவும், ஈ-காமர்ஸ் தளங்கள் மூலமாகவும் கிடைக்கிறது. மகளிர் தின விளம்பரத்தின் மூலம் இந்நிறுவனம் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது. தற்போது பலரும் பெட்ரோல் டீசல் இல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கியிருப்பதால் கோமாகி தனது சந்தை பங்கை மேலும் விரிவுபடுத்தும் வாய்ப்புள்ளது.
இந்தியாவில் உள்ள பல மின்சார வாகன உற்பத்தியாளர்களில் கோமகி நிறுவனமும் ஒன்று. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அரசாங்கத்தின் ஊக்க தொகையை பயன்படுத்தி கோமாகி மற்றும் ஒக்கினாவா போன்ற நிறுவனங்கள் மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்நிறுவனத்தின் தலைமையிடம் டெல்லியாகும். டெல்லியின் கபாஷேரா மற்றும் கேரளாவின் திருச்சூரில் உற்பத்தி மற்றும் அசெம்பிளி ஆலையை கொண்ட கோமாகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பிலிருந்து மின்சார வாகன சந்தையில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் அதிகம் விற்பனையான மாடல் XGT KM. அதன் பிறகு தனது போர்ட்போலியோவை விரிவுபடுத்திய கோமாகி நிறுவனம் பல இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
மலிவு வலையிலான ஸ்கூட்டர்களை தயாரிப்பதில் இந்நிறுவனம் பெயர் பெற்றது. இப்போது 14 மாடல் ஸ்கூட்டர்கள் கிடைக்கிறது. அதில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் X-One ரக ஸ்கூட்டர்கள் ரூ. 35,999 கிடைக்கிறது மற்றும் பிரீமியம் வெனிஸ் போன்ற மாடல்கள் ரூ. 1.67 லட்சம் முதல் கிடைக்கின்றன.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications