கூகுள் Adsense-ன் காட்பாதர் என அழைக்கப்படும் கோகுல் ராஜாராம் டெக் வல்லுனராக மட்டும் இருப்பது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் குவிந்திருக்கும் சிலிக்கான் வேலி பகுதியில் மிகவும் பிரபலமான முதலீட்டாளராக இருக்கும் ஏஞ்சல் முதலீட்டாளராக இருக்கிறார்.
கடந்த மாதம் கோகுல் ராஜாராம் அடுத்த 9 மாதத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோல்வி அடையும், மூடப்படும், பணிநீக்கம் செய்யும் என எச்சரித்தார். இது சிலிக்கான் வேலி பேங்க் திவாலாகி அரசு கைப்பற்றி வங்கி பணத்திற்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்ட பின்பு தெரிவித்தார். இப்போது இதை யாரும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் தற்போது நடப்பதை பார்க்கும்போது அச்சம் அதிகரித்துள்ளது.

கோகுல் ராஜாராம் சொன்னது போல் இந்தியாவிலும் முன்னணி ஐடி நிறுவனங்கள் முதல் EdTech துறையை தாண்டி பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தகத்தையும், லாபத்தையும் தக்க வைத்துக்கொள்ள பணிநீக்கம் செய்ய துவங்கியுள்ளது.
இந்த நிலையில் டிவிட்டருக்கு போட்டியாகவும், டிவிட்டரை போலவே இந்தியாவில் உருவாக்கப்பட்ட Koo நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 30 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 260 ஊழியர்கள் இந்த பணிநீக்கத்தின் மூலம் பணியை இழக்க உள்ளனர்.
இதுக்குறித்து Koo நிர்வாகம் கூறுகையில் ஜனவரி 2023 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்டிய பின்பு நிறுவனத்தின் நிதி நிலை சிறப்பாகவே உள்ளது. மேலும் புதிதாக நிதியை திரட்டும் எந்த திட்டமும் தற்போது இல்லை, மேலும் வருவாய் அளவிலும் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருக்கும் காரணத்தால் புதிய முதலீடுகள் தேவைப்படும் போது ஈர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2022ல் KOO நிறுவனம் சுமார் 15 ஊழியர்களை ஆப்ரேஷன்ஸ் மற்றும் பேக்என்ட் அணியில் இருந்து பணிநீக்கம் செய்தது. இதை தொடர்ந்து தற்போது 260 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மேலும் இக்காலக்கட்டத்தில் அனைத்து வர்த்தகமும் செயல்திறன் அடிப்படையிலும், செலவுகளை குறைக்கும் திட்டத்துடன் இயங்க வேண்டியது முக்கியம் எனவும் KOO தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல சமுக வலைத்தளம், டிஜிட்டல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் லாக்டவுன் காலத்தில் அதிகப்படியான ஊழியர்களை சேர்த்த நிலையில், தற்போது வர்த்தகம் வருமானம் ஆகியவை குறைந்த காரணத்தால் பணிநீக்கமும் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications