இந்தியாவில் வெளிநாட்டு சமூக வலைதளங்களுக்கு போட்டியாக பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டு பல போராட்டங்களுக்கு பின்பு குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டாலும், இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்வது பெரும் சுமையாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் போதுமான முதலீடுகள் இல்லாத காரணத்தால் இத்தகைய சமுகவலைத்தள நிறுவனங்கள் தொடர்ந்து பயணிக்க முடியாமல் மாட்டிக்கொள்கிறது.
அந்த வகையில் இந்தியாவில் பிரபலமான சமுக வலைதளமாக வலம் வந்த Koo, அதன் ஆரம்பக்கட்டத்தில் டிவிட்டருக்கு (X) போட்டியாக கருதப்பட்டது. ஆனால், தற்போது பல முக்கிய காரணத்தால் இந்நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் மூடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

KOO தளத்தை உருவாக்கிய நிறுவனர் அபிரமையா ராமகிருஷ்ணன் லின்ங்டுஇன் தளத்தில் வெளியிட்ட பதிவில், நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது சமூக வலைதள பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
KOO ஆப் பிரபல முதலீட்டு நிறுவனமான டைகர் குளோபல், ஏசல் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கி வந்தது. சமீப காலமாக கூ ஆப் நிதிநெருக்கடியில் மாட்டிக்கொண்டு தவித்து வந்த நிலையில், பல முதலீட்டு திரட்டும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை விற்க முயற்சி செய்தது, இதற்காக பல நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பல்வேறு சுற்று பேச்சுக்களுக்குப் பிறகும் இணைப்பு மற்றும் விற்பனை முயற்சிகளிலும் தோல்வியடைந்தது.
இதன் காரணமாக தற்போது KOO தளத்தின் ஆப்ரேஷன்ஸ் மொத்தமாக மூடப்பட்டு உள்ளதாக நிறுவனர் அபிரமேய ராமகிருஷ்ணன் லின்ங்டுஇன் தளத்தில் அறிவித்துள்ளார்.
"இந்தியாவில் இருந்து உலகளவில் போட்டியிடும் வகையிலான சமூக வலைதளம், செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளி, எலக்ட்ரிக் வாகனங்கள் அல்லது பிற எதிர்கால பிரிவுகளில் ப்ராடெக்ட்களை உருவாக்க நீண்ட கால முதலீடு அவசியம். ஏற்கனவே இந்த துறையில் உலகளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் போது இன்னும் அதிக முதலீடு தேவைப்படும்," என்று KOO தளத்தின் இணை நிறுவனரான Mayank Bidawatka உடன் இணைந்து அபிரமையா ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கூ தளம் இறுதியாக 3one4 Capital, Accel உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து 66 மில்லியன டாலர் மதிப்பிலான நிதியை திரட்டிய பின்னர், நிறுவனத்தின் மதிப்பு 275 மில்லியன் டாலராக இருந்தது.
அபிரமையா ராமகிருஷ்ணன் இதற்கு முன்னர் டாக்ஸிஃபார்சூர் (TaxiForSure) என்ற ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனத்தை தொடங்கியிருந்தார். இதை ஓலா தனது சேவையை தென்னிந்தியாவுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட போது 2015 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டது.
உலகளவில் போட்டியிடும் கனவுடன் தொடங்கப்பட்ட இந்திய சமூக வலைதளமான Koo, போதுமான நிதி கிடைக்காத காரணத்தால் தனது கதவை முட முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications