இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் துவங்க அதிகளவில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தென் கொரியாவை சேர்ந்த நேரடி விற்பனை நிறுவனமான அடோமி-யின் இந்திய கிளை நிறுவனம் சுமார் 250 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் புதிய தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக அடோமி இந்தியா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க நாட்டின் முக்கியமான வர்த்தகப் பகுதியில் நலத்தைத் தேடி வருகிறது.
அடோமி இந்தியா
தென் கொரியா-வின் அடோமி-யின் இந்திய கிளை நிறுவனமான அடோமி இந்தியா சுமார் 250 கோடி ரூபாய் முதலீட்டில் உணவு மற்றும் சப்ளிமென்ட்ரி பொருட்களைத் தயாரிக்கத் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அமைக்கப்படும் தொழிற்சாலை மூலம் இந்திய வர்த்தகத்திற்கு மட்டும் அல்லாமல் வெளிநாட்டுச் சந்தைக்குத் தேவையான பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது அடோமி இந்தியா.
NCR பகுதி
அடோமி இந்தியா தற்போது தொழிற்சாலை அமைப்பதற்காக NCR பகுதியில் நிலத்தைத் தேடி வருவதாக இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஷேக் இம்தியாஸ் அலி தெரிவித்துள்ளார். மேலும் 2022க்குள் அடோமி இந்தியா நிறுவனம் இந்தியாவில் அமைக்கப்படும் தொழிற்சாலைக்குக் குளோபல் சோர்சிங் மற்றும் குளோபல் சேல்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆயுர்வேத பொருட்கள்
இதுமட்டும் அல்லாமல் அடோமி இந்தியா இந்தியாவில் இருந்து ஆயுர்வேத பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும் ஷேக் இம்தியாஸ் அலி தெரிவித்துள்ளார். அடோமி இந்தியா தற்போது 50 நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் நிலையில் இந்தியாவில் பாரம்பரியமான ஆயுர்வேத பொருட்கள் இந்த 50 நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு உண்டு.
கொரிய உற்பத்தியாளர்கள்
மேலும் அடோமி இந்தியா 10 கொரிய உற்பத்தியாளர்கள் உடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் அனைவரும் இந்தியாவில் தொழிற்சாலை துவங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக அடோமி இந்தியா தெரிவித்துள்ளது.
2025க்குள் நிறைவு
அடோமி இந்தியா புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலையின் மூலம் இந்தியா முழுவதும் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்பதால், NCR பகுதியை தேர்வு செய்துள்ளோம். மேலும் தற்போது திட்டமிட்டுள்ள 250 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை திட்டம் 2025ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளது.
அடோமி வர்த்தகம்
நேரடி விற்பனையில் உலகளவில் 12வது இடத்தில் இருக்கும் அடோமி தென் கொரியாவில் 426 பொருட்களை விற்பனை செய்கிறது. இந்தியாவில் பர்சனல் கேர், லிவிங், புட்ஸ் மற்றும் ஹெல்த் சம்பளிமென்ட்ஸ் பிரிவில் சுமார் 63 பொருட்களை விற்பனை செய்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications