தென் கொரியாவில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒவ்வொரு முறையும் குழந்தை பிறக்கும் போது 100 மில்லியன் கொரியன் வோன் ($75,000) வழங்குகிறது. நாட்டின் மோசமான பிறப்பு விகிதத்தை சமாளிக்கும் முயற்சியில் இப்புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது என்று சிஎன்என் அறிக்கை தெரிவித்துள்ளது. 75000 டாலர் எனில் 62.25 லட்சம் ரூபாய்.
Booyoung குழுமம் 2021 முதல் 70 குழந்தைகளைப் பெற்ற அதன் தொழிலாளர்களுக்கு மொத்தம் 7 பில்லியன் கொரியன் வோன் ($5.25 மில்லியன்) ரொக்கமாகச் செலுத்தியுள்ளது. ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இருவரும் பயனடைவார்கள் என்றும் நிறுவனம் கூறியது.

குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெற்றோர்களையும் ஊக்குவிப்பதில் பங்களிக்கும் நிறுவனமாக நாங்கள் அங்கீகரிக்கப்படுவோம் என்று நம்புகிறேன் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் லீ ஜூங்-கியூன் தனது ஊழியர்களிடம் கூறினார்.
மூன்று குழந்தைகளுடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு 300 மில்லியன் கொரியன் வோன் ($225,000) ரொக்கமாகவோ அல்லது வாடகை வீடாகவோ பெறலாம். ஆனால் இந்த சலுகை பெற கொரியா அரசு கட்டுமானத்துக்காக நிலத்தை வழங்கினால் இந்த தேர்வு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
2022 ஆம் ஆண்டில், தென் கொரியா உலகளவில் குறைந்த கருவுறுதல் விகிதத்தை 0.78 ஆக பதிவு செய்துள்ளது, இது ஒரு பெண் தனது வாழ்நாளில் பெறும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. கொரியாவின் அதிகாரப்பூர்வ கணிப்புகளின்படி, அந்த எண்ணிக்கை 2025 இல் 0.65 ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கொரிய அரசும் பிற தனியார் அமைப்புகளும் குடிமக்களை அதிக குழந்தைகளைப் பெற ஊக்குவிக்க நிதி நன்மைகளை வழங்குகின்றன, ஆனால் இதுவரை யாரும் பூயோங் குழுமத்தின் அளவுக்குச் சலுகைகளை வழங்கவில்லை.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நாட்டில் தற்போதுள்ள பிறப்பு விகிதத்தை மேம்படுத்தும் முயற்சியில் நாட்டிலுள்ள தம்பதிகள் தங்கள் குடும்பத்தில் கொஞ்சம் குட்டி டிராகனைச் சேர்க்க வலியுறுத்தினார்.
பூயாங் குழுமம் 1983 இல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, 270,000 வீடுகளை கட்டியுள்ளது. நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் கொரிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பூயாங் போன்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பணிகளை கொரிய அரசு செய்து வருகிறது.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications