தமிழ்நாட்டை ஏமாற்றிய தென்கொரிய காலணி நிறுவனம்.. ரூ.1,250 கோடி முதலீட்டை ஆந்திராவுக்கு மாற்றியது ஏன்?

தென் கொரியாவை சேர்ந்த முன்னணி நிறுவனமும், அடிடாஸ் போன்ற உலகப் பிராண்டுகளுக்கு காலணி தயாரித்து வழங்கும் முக்கிய நிறுவனமுமான ஹ்வாஸியுங் (Hwaseung), இந்தியாவில் தனது முதல் ஆலையை அமைக்க 150 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,250 கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

முக்கியமாக, இந்த நிறுவனம் முதலில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், தற்போது தனது முதலீட்டை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவின் சட்டமன்ற தொகுதியான குப்பத்திற்கு மாற்றியுள்ளது. இந்தத் திடீர் மாற்றம் வணிக உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டை ஏமாற்றிய தென்கொரிய காலணி நிறுவனம்.. ரூ.1,250 கோடி முதலீட்டை ஆந்திராவுக்கு மாற்றியது ஏன்?

ஆந்திராவில் மிகப்பெரிய வேலைவாய்ப்பை உருவாக்க திட்டம் : இதுகுறித்து ஹ்வாஸியுங் காலணிப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரியான பாப் ஷோரெக் கூறுகையில், இந்த முதலீட்டின் முதன்மையான இலக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதுதான் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், எங்கள் 3 கட்டப் பணிகள் முடிவடையும்போது, சுமார் 20,000 ஊழியர்களுக்கு நாங்கள் வேலை வழங்குவோம். இந்த ஆலை ஆண்டுக்கு 20 மில்லியன் ஜோடி விளையாட்டு காலணிகளை தயாரிக்கும். இது ஏற்றுமதிக்காகவே இருக்கும், எதிர்காலத்தில் உள்நாட்டு சந்தைக்கும் தயாரிப்போம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர மாநில அரசு இந்த ஆலைக்காக குப்பத்தில் 100 ஏக்கர் நிலத்தை உடனடியாக ஒதுக்கியுள்ளது.

இந்தியாவைத் தேர்வு செய்தது ஏன்..?: தென் கொரியா, வியட்நாம், சீனா போன்ற பல நாடுகளில் உற்பத்தி வசதிகளை கொண்டிருக்கும் ஹ்வாஸியுங் போன்ற நிறுவனங்களுக்கு, தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் (Labour Intensive Industry) என்பதால், சரியான இடத்தைத் தேர்வு செய்வது அவசியம் ஆகும். இந்தியா குறித்துப் பேசிய ஷோரெக், "புதிய முதலீடுகளுக்காக பல நாடுகளை ஆய்வு செய்தோம். இந்தியா தான் மிக அதிக நம்பிக்கையை அளித்தது. இங்குள்ள பெரிய இளம் மக்கள் தொகை மற்றும் நல்ல கல்வி அமைப்பு ஆகியவைதான் முக்கியக் காரணம். எங்கள் தொழிலுக்கு தேவையான அதிக எண்ணிக்கையிலான திறமையான ஊழியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற பொறியாளர்களை இங்கே பெற முடியும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு மாறியது ஏன்..?: முதலீட்டிற்கு சரியான மாநிலத்தை அறிய 'இன்வெஸ்ட் இந்தியா' அமைப்பை ஹ்வாஸியுங் அணுகியபோது, அவர்களுக்கு தமிழ்நாடும் ஆந்திரப் பிரதேசமும் பரிந்துரைக்கப்பட்டன. அதன்படி, நிறுவனம் முதலில் தமிழ்நாட்டுடன் ஒப்பந்தம் செய்த பின்னரே, ஆந்திராவுக்கு மாறியது.

இது குறித்துப் பேசிய பாப் ஷோரெக் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள கைடன்ஸ் அமைப்பிலும், ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திலும் நெருக்கமாகப் பணியாற்றினோம். நீண்ட ஆய்வுக்குப் பிறகு, ஆந்திரப் பிரதேசம்தான் முதலீடு செய்ய சரியான இடம் என்று நாங்கள் உணர்ந்தோம்" என்று விளக்கினார். இரண்டு மாநிலங்களும் நல்ல நில சலுகைகளையும், உழைக்கத் தயாராக இருக்கும் மக்களையும் கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மிகப்பெரிய முதலீடு, ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப்பாக குப்பம் பகுதிக்கு ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+