கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் நிறுவனத்தின் தனிநபர் கடன் பிரிவினை மொத்தமாக கையகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கோடக் மகேந்திரா வங்கி வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய வங்கியாக இருக்கிறது. இந்த வங்கி அண்மையில் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியின் தனிநபர் கடன் பிரிவினை கையகப்படுத்தியுள்ளது. 3,330 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கோடக் மகேந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் " ஸ்டாண்டர்ட் சார்ட்டட் நிறுவனத்திடம் இருந்து அவர்களின் தனிநபர் கடன் போர்ட்போலியவை நாங்கள் மொத்தமாக கையகப்படுத்தி இருக்கிறோம். சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து முறையான ஒப்புதல்கள் கிடைத்த பின்னரே இந்த கையகப்படுத்தல் நிறைவு பெற்றது " என தெரிவித்துள்ளது.

ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து இந்த போர்ட்போலியோ தங்களுக்கு சொந்தமாக மாறி இருக்கிறது என கோடக் மகேந்திரா வங்கி பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியில் தனிநபர் கடன் பிரிவு முழுவதுமாக கோடக் மகேந்திரா வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியில் வாங்கப்பட்ட தனிநபர்கடன்களை இனி கோடக் மகேந்திரா வங்கி தான் நிர்வகிக்க இருக்கிறது.
கோடக் மகேந்திரா நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிரிவுக்கான தலைவராக செயல்படும் அம்புஜ் சந்திரா, கோடக் மகேந்திரா நிறுவனத்திற்கு இந்தியாவின் இந்த தனிநபர் கடன் சந்தை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகிறது எனக் கூறியுள்ளார்.
வாடிக்கையாளர்களை மையப்படுத்திய எங்களுடைய சேவை மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான எங்களுடைய பலம் இந்த பிரிவில் எங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக சில்லறை கடன்கள் பிரிவில் தங்கள் வங்கி பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி , இனி முழுக்க முழுக்க வசதி பெற்ற மற்றும் பணக்கார வாடிக்கையாளர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சேவை செய்வதில் கவனம் செலுத்தப் போகிறது, எனவே தான் தனிநபர் கடன் பிரிவினை நாங்கள் கோடக் மகேந்திராவிடம் ஒப்படைத்து விட்டோம் என தெரிவித்துள்ளது.
கோடக் மகேந்திரா நிறுவனம் 2025 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 6250 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டி உள்ளது. இது 2024ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 81% அதிகமாகும். அதேபோல கோடக் மகேந்திரா நிறுவனம் 2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வட்டி வருமானமாக மட்டும் 6842 கோடி ரூபாயை பெற்றுள்ளது.ஸ்டாண்டர்ட் சார்ட்டட வங்கி லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
Story Written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications